கேரளாவில் மாஸ் காட்டும் ரஜினி.. விக்ரம் பட வசூலை மிஞ்சிய ஜெயிலர்
கடந்த வாரம் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் `ஜெயிலர்` கேரளா பாக்ஸ் ஆபிஸில் `விக்ரம்` பட வசூலை மிஞ்சியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10 ஆம் தேதி உலக முழுவதும் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. 'தலைவர் இஸ் பேக்' என கொண்டாடும் அளவிற்கு இந்த திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களுக்கான ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த படம் வெளியாகி ஒரு வாரம் கடந்திருந்தாலும், இன்றும் பல திரையரங்குகளில் டிக்கெட் புல்லாகி வசூல் சாதனையில் பட்டையை கிளப்பி வருகிறது.
ரஜினியின் ஜெயிலர்
ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என அன்புடன் அழைக்கப்படுபவர், ரஜினிகாந்த். இவர் நடித்த படங்கள் சில கடந்த 5 ஆண்டுகளில் விமர்சன ரீதியாக பயங்கர அடி வாங்கியது. கடைசியாக நடித்த அண்ணாத்த படமும் அதற்கு முன்னதாக நடித்திருந்த தர்பார், பேட்ட, 2.0 போன்ற படங்களும் வசூலில் குறை வைக்கவில்லை என்றாலும், சினிமா ரசிகர்களை பெரிதும் ஈர்க்காமல் போனது. இதையடுத்து நடிகர் ரஜினியின் கம்-பேக்கிற்காக கோலிவுட் திரையுலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தது.
மேலும் படிக்க | ரஜினியுடன் நடிக்க மறுத்த ‘அந்த’ பிரபல நடிகர்..! இதுதான் காரணம்..!
குடும்ப கதைகளில் நடித்துக்காெண்டிருந்த ரஜினியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படம் மூலம் ஆக்ஷன் கதையில் நடிக்க வைத்துள்ளார். தற்போது நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது இந்த திரைப்படம். ரஜினிக்கு ஏற்ற மாஸான காட்சிகள், புதிய பரிமானத்தில் அவருடைய காமெடி என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்துள்ளது. இதனால், ரசிகர்கள் பலர் ஜெயிலர் படத்தை பாராட்டி வருகின்றனர்.
ஜெயிலர் படத்தில் நடித்த பிரபலங்கள்
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினியை தவிர நடித்திருந்த பிற முன்னணி நட்சத்திரங்கள் அனைவருமே கேமியோ ரோலில் வந்திருந்தனர். மலையாள நடிகர் மம்மூட்டி, நடிகை தமன்னா, இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்ட அனைவருக்கும் சமமான ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து விஜய் வசந்த், விநாயகம், விடிவி கணேஷ், தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரும் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்திற்கு மனைவியாக ரம்யா கிருஷ்ணன் இதில் நடித்திருந்தார்.
ஜெயிலர் வசூல் நிலவரம்
ஜெயிலர் படம், ரிலீஸான முதல் நாளிலேயே 50 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்த வசூல் நிலவரம் 2வது நாளான நேற்று 75 கோடியாக இருந்ததாக கூறப்பட்டது. படத்தின் வசூல், நாட்கள் ஆக ஆக ஏறிக்கொண்டே போனது. சமீபத்தில் ஜெயிலர் படம் 375 கோடியை தாண்டியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தது. அதில், படம் 375.40 கோடி ரூபாயை கடந்து வசூலில் சாதனை படைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்த படங்களிலேயே ஜெயிலர் படம்தான் ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலை குவித்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் பட வசூலை முந்திய ஜெயிலர்
இந்நிலையில் 'ஜெயிலர்' படம் கேரளா பாக்ஸ் ஆபிசிலும் புதிய சாதனை படைத்துள்ளது. தன்படி இதுவரையில் கேரளா மாநிலத்தில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக கமலின் 'விக்ரம்' படம் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அந்த வசூலை முந்தி ஜெயிலர் படம் கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக சாதனை படைத்துள்ளது. இதனை தற்போது ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தின் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க | “ரஜினியை விட விஜய்தான் பெரிய ஆள்..” பிரபல நடிகர் கொடுத்த ஓபன் ஸ்டேட்மெண்ட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ