ஒரே போன் கால்..!LCU-வில் இணையும் ரஜினிகாந்த்? லோகேஷ் எடுத்த முடிவு!
விக்ரம் படத்துக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் முக்கிய இயக்குநராக உயர்ந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவையும் தாண்டி எகிறியுள்ளது.
இந்த சூழலில் ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் லோகேஷ் கனகராஜுக்கு போன் செய்த ரஜினி, இந்த ஆண்டின் இறுதியில், அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கால்ஷூட் கொடுப்பதாக வாக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த லோகேஷ் கமல்ஹாசனிடம் உதவி கேட்டு பேசியுள்ளாராம்.
இப்போது லியோ படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக கைதி 2 படத்தையும், விக்ரம் 3 படத்தையும் கமல், சூர்யா, கார்த்தியை வைத்து இயக்க உள்ளார். அதோடு தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களையும் இயக்க கமிட் ஆகியுள்ளாராம். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்குவது அபூர்வமான வாட்ப்பு என்பதால், கமல்ஹாசனிடம் பேசி விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை ஒத்திவைக்க கேட்டுள்ளதாக பேசப்படுகிறது.
மேலும் படிக்க | லிப் லாக் சர்ச்சை குறித்து ஓப்பனாக பேசிய அனிகா சுரேந்திரன்!
தலைவர் 169 படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் தயாரிக்க ரஜினி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணத்தால் அந்தப்படம் கைவிடப்பட்டது. இதற்கு நடுவே விக்ரம் வெளியாகி வெளியாகி மாஸ் ஹிட் ஆனது.
இப்போது ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைந்தால் ஏற்கனவே லோகேஷ் ரஜினிக்காக எழுதிய கதையை எடுப்பாரா அல்லது Lokesh Cinematic Universe உடன் இணைக்கப்படுவாரா என்பது தெரியவில்லை. இதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒன்றும் கூட. ஜெய்லர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ரஜினி பிஸியாக இருந்து வருகிறார். அதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலும் நடித்து வருகிறார். லியோவிலேயே ரஜினி ரோல் குறித்து லோகேஷ் வெளிப்படுத்துவாரா? காத்திருப்போம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ