இன்று ரஜினிகாந்த் பிறந்தநாள்: ரசிகர்கள், தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து!!

இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து கூறிவருகின்றனர்.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 68-வது பிறந்த நாள். ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் அமைப்பினர் பல தொண்டு சேவைகளை செய்து வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதத்தின் இறுதியில், தான் அரசியலுக்கு வரபோவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். அரசியலுக்கு வருவேன் என அறிவித்த பிறகு, இது ரஜினியின் முதல் பிறந்த நாள் ஆகும்.
இந்நிலையில் அவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.