மருத்துவமனையில் கமல்ஹாசன்! இந்தவாரம் பிக்பாஸை தொகுத்து வழங்கப்போவது யார்?
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கமல்ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பில் கோல் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த வாரம் கோர்ட் ரூம் டாஸ்க் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸூக்கு ஒரு சோகமான செய்தி வந்து சேர்ந்துள்ளது. இதுவரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த கமல்ஹாசன் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | ரஜினியுடன் நடிக்க ஆசையா?.... செம வாய்ப்பு வந்திருக்கு
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். சளி உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கமல்ஹாசன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதனால் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்தமுறை இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உடல்நலக்குறைவால் பங்கேற்க முடியாமல் போனபோது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
அவரே இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை அவர் வரவில்லை என்றால் யாரை பிக்பாஸ் களமிறக்கப்போகிறார்கள் என்பதும் இப்போதைக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. புதிய முகம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தால், எது எப்படி? என்பதையெல்லாம் பாயிண்ட் பிடித்து கேள்வி கேட்க முடியுமா? என்ற சந்தேகம் இருக்கிறது. இதற்கான விடையெல்லாம் இன்னும் ஓரீரு பொழுதில் தெரிந்துவிடும்.
மேலும் படிக்க | Viral Video: ஆபாச வீடியோ சர்ச்சை அஞ்சலி அரோரா நள்ளிரவில் செய்த வேலையை பாருங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ