"இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் என ஏராளமானோர் நடித்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி இந்த படத்தில் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட நம் எண்ண ஓட்டத்தில் இன்றளவும் நினைவில் நிற்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்தில் இடம்பெற்ற வசனங்களாட்டும், காட்சிகளாகட்டும் ஒவ்வொன்றையும் மிக நேர்த்தியாக படக்குழுவினர் அனைவரும் காட்சிபடுத்தியிருந்தனர். படமும் எதிர்பார்த்த படியே மிகப்பெரிய வெற்றியடைந்தது. அது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.


ஆனால் படத்தை விடவும் இதில் இடம்பெற்ற கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் வைத்து கூட்டிச் செல்லும் அந்த காட்சிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர் என திரும்பிய பக்கமெல்லாம் சமூக வலைதள பக்கங்களில் இந்த மீம்ஸ் தான் உலா வந்தன.


ALSO READ | Rangan Vaathiyar memes: நெட்ப்ளிக்ஸ் வரை சென்றடைந்த வாத்தியாரே மீம்


"வா வாத்தியாரே போலாம் என்ற அந்த ஒற்றை டயாலாக்கும் (Dialogue) சைக்கிளும் போதும் ஒட்டுமொத்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் செம்ம விருந்தாக இது அமைந்தது. அதுவும் நாடு விட்டு நாடு, ஸ்பேஷ்க்கு கூட மீம்ஸ் கிரியேட்டர்களால் சென்று வந்தனர் நம்ம கபிலனும், ரெங்கன் வாத்தியாரும்.


இப்போது நம்ம ரெங்கன் வாத்தியார் அடுத்து மற்றொரு பெயரிடப்படாத படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அறிமுக இயக்குநர் "ராம் சங்கைய" பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லட்சுமன் குமார் படத்தினை தயாரிக்கிறார். படத்திற்கு "ஐரா" புகழ் சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். 


ALSO READ | சார்பட்டா பரம்பரை: இணையத்தை கலக்கும் கபிலன் - ரங்கன் வாத்தியார் மீம்ஸ்


ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி மற்றும் நடிகை ரோகினி ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.


இந்தப் படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. அதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR