ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயார் -ராகவா லாரன்ஸ் அதிரடி!
நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயார். அவரின் நடிப்பு திறனை காட்டட்டும் என ஸ்ரீ ரெட்டி புகாருக்கு ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை!!
நடிகை ஸ்ரீ ரெட்டிக்கு வாய்ப்பு வழங்க தயார். அவரின் நடிப்பு திறனை காட்டட்டும் என ஸ்ரீ ரெட்டி புகாருக்கு ராகவா லாரன்ஸ் அதிரடி அறிக்கை!!
தெலுங்கு திரையுலகில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் திரைதுறையை சார்ந்தவர்களின் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார்.
தமிழ் லீக்ஸ் (#tamilleaks) என்ற ஹேஸ்டேக் மூலம் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் விஷால் மற்றும் நடிகரும், நடன மாஸ்டரான ராகவா லாரன்ஸ் ஆகியோர் குறித்து புகார்களை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் பற்றி அவர் என் வயிற்றை காட்டுமாறு என சொன்னார். பின்னர் கண்ணாடி முன்பு நின்று கவர்ச்சியான அசைவுகளை செய்து காட்டுங்கள் என்று கூறினார். பிறகு அவர் என்னுடன் சவாரி செய்தார். உடனடியாக, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். அதன் பிறகு எங்களுடைய நட்பு சிலகாலம் தொடர்ந்தது. ஆனால், பெல்லாம்கொண்டா இதில் வில்லனாக மாறினார் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.....!
"என்னைப் பொறுத்தவரை ஸ்ரீரெட்டி விவகாரம் ஒரு பெரிய விஷயம் அல்ல. அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், இந்த சர்ச்சை குறித்து பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு கேட்டார்கள். அவர்களுக்கு பதிலளிக்க, இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். நான் தெலுங்கில் 'ரெபல்' படத்தை இயக்கிய சமயம் ஒரு ஹோட்டலில் என்னை சந்தித்ததாக ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். அப்படிப் பார்த்தால், நான் அந்தப் படத்தை இயக்கி 7 வருடங்கள் ஆகிறது. இந்த 7 வருடங்கள் என் மீது புகார் கூறாத ஸ்ரீரெட்டி, தற்போது கூறுவது ஏன்?

நான் எந்தத் தவறும் செய்யவில்லை, எனவே உங்களை நேரில் சந்திப்பதில் எனக்கு பயமில்லை. எனது படத்தில் நீங்கள் நடிக்கும் பட்சத்தில், உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், எனது மேனேஜரைத் தொடர்பு கொண்டு, உங்களது வழக்கறிஞர்கள் மற்றும் உங்களது நலம் விரும்பிகளுடன் வந்து நடித்துக் காட்டுங்கள். நான் கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்.
உங்களுக்கு பயந்து இந்த அறிக்கையை நான் வெளியிடவில்லை. நான் பெண்களை மதிப்பவன், அதனாலேயே எனது தாய்க்கு கோவில் கட்டியுள்ளேன், அதை அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பித்துள்ளேன். நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம். உங்களுக்காக கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்" என இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகக் கூறியுள்ளார். ஸ்ரீரெட்டி இதற்கு பதில் தருவாரா அல்லது அடுத்த பட்டியலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.