“பட வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்..” பிரபல நடிகை தெரிவிக்கும் பகீர் உண்மைகள்..!
Regina Cassandra: பிரபல நடிகை ரெஜினா, பட வாய்ப்பிற்காக தன்னிடம் சிலர் பாலியல் சலுகைகளை எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர், ரெஜினா. இவர், 2005ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் நாயகியாக நடித்திருந்தார். இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது தனக்கு பட வாய்ப்பு தருவதற்கு சிலர் பாலியல் சலுகைகளை எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.
பாலியல் சலுகைகள்:
ரெஜினா சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் குறித்தும் குறிப்பிட்டார். ஒரு முறை பட வாய்ப்புக்காக ஒருவரிடம் பேசிய போது அவர் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’டிற்கு தயாராக இருந்தால் உடனே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியதாக குறிப்பிட்டார். அதற்கு தனக்கு அர்த்தம் புரியவில்லை என்றும் அவர் தன் சம்பள விவரம் குறித்து பேசுவதாக எண்ணியதாகவும் ரெஜினா தெரிவித்துள்ளார். சிறகு தன் மேனேஜரிடம் பேசிய பின்புதான் அவர் அப்படி கேட்டதற்கான அர்த்தம் தனக்கு புரிந்ததாக அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது தனக்கு வெறும் 20 வயதுதான் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | 500 கோடியை நெருங்கும் ஜெயிலர்..! முழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதான்..!
பொங்கியெழுந்த ரசிகர்கள்:
ரெஜினா கூறிய விவரங்களும் அவர் பகிர்ந்த தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சில கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அது மட்டுமன்றி, ரெஜினாவிடம் அப்படி கேட்ட நபர் யார் என்றும் கேட்டு வருகின்றனர்.
தொடர் குற்றச்சாட்டுகள்:
சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் வரும் பெரும்பாலான நடிகைகள், பட வாய்ப்பு கேட்டு போன இடத்தில் தங்களுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் ‘மீ டூ’விவகாரம் தமிழத்தில் தலை தூக்கிய போது, பலர் முன் வந்து தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் அதை யார் செய்தது என்பது குறித்தும் வெளிப்படையாக கூறினர். இதில், பல திரையுலக பிரபலங்கள் சிக்கினர். ஆனாலும், இந்த பிரச்சனை ஓய்ந்ததாக தெரியவில்லை. இதை சில நடிகைகளே ‘இலை மறை காய் மறைவாக இருக்க வேண்டும்..’ என்று கூறி ஆதரிக்கின்றனர். ஒரு சில நடிகைகள், அவ்வப்போது தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து தெரிவித்தால், ‘அதை அப்போது கூறாமல் ஏன் இப்போது வந்து கூறுகிறாய்.’ என்று உடன் இருப்பவர்களே அவர்களை வஞ்சிக்கின்றனர். தினம் தினம் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவதும் பின்பு காணாமல் போவதுமாய் இருப்பது, தொடர் கதையாகி வருகிறது.
மேலும் படிக்க | கேரளாவில் மாஸ் காட்டும் ரஜினி.. விக்ரம் பட வசூலை மிஞ்சிய ஜெயிலர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ