பாகுபலி- 2 படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி பெரும் பொருட்செலவில் இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர். பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தின் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இணைந்து நடித்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக வெளியான இப்படம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கவனத்தை ஈர்த்தது. ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோரும் இதில் முக்கிய ரோல்களில் நடித்து இருந்தனர்.


ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் சில வாரங்களுக்கு முன்பு  ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இப்படம் பற்றி பதிவிட்டு இருந்த ஒருவர், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை 30 நிமிடங்கள் பார்த்ததாகவும் அதுவொரு ஒரு குப்பைத் திரைப்படம் எனவும் மிகவும் காட்டமாக விமர்சித்திருந்தார். 



இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்றவரும் ரஜினி நடித்த எந்திரன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியவருமான ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி அந்தப் பதிவில் வந்து  “ஆர்.ஆர்.ஆர் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல் கதை” என கமெண்ட் செய்திருந்தார். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது.


மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!


 


 


ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் கதாபாத்திரங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களைப்போல உள்ளதாக வெளிநாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர் படம் வந்தபோது கருத்து தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ரசூல் பூக்குட்டி இவ்வாறு கமெண்ட் செய்துள்ளதால் சமூக வலைதளத்தில் இது பேசுபொருளாகியுள்ளது. 


தெலுங்கு சினிமாவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமையால்தான் ரசூல் பூக்குட்டி இவ்வாறு கூறியிருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அன்று விஜயகாந்த்; இன்று கமல்! இடிக்கப்படுகிறதா ஆழ்வார்பேட்டை ஆபீஸ்? பின்னணி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR