தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 12 வாரங்களை கடந்துள்ளது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா மற்றும் அனிதா என பத்து பேர் வெளியேறியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பிக் பாஸ் (Bigg Boss Tamilசீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. அந்தவகையில் பிக் பாஸ் இல் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. புதிய புரமோவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியோவின் குடும்பம் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகின்றனர். 


ALSO READ | பிக் பாஸ் 4 இல் மீண்டும் ஓபன் நாமினேஷன்- யார் யாருக்கு ஆப்பு?


முதலில் அவரது மனைவி நுழைய காதலே காதலே என்ற பாடல் ஒலிக்க இருவரும் எமோஷனலாக கண் கலங்குவதை காணமுடிகிறது. இந்த காட்சிகள் சென்டிமென்டின் உச்சமாக உள்ளது. 


இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஸ்ருதி பேசியபோது ’நண்பர்களின் கடுப்பு’ என்ற கூறி ஒரு எபிசோடில் நீ பாட்டுக்கு குடுகுடுன்னு ஓடிப்போய் ரம்யாவை தூக்கியதுதான் நண்பர்களின் கடுப்பு என்று சொல்ல, அதற்கு ரியோ (Rio Raj), ‘இது நண்பர்களின் கடுப்பு மாதிரி தெரியலையே’ என்று ஸ்ருதியை கிண்டலுடன் ரம்யா பார்க்கும் காட்சி புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.


ALSO READ | பிக் பாஸ் சோம் சேகரின் செல்ல நாய் திடீர் மரணம்! வீடியோ!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR