பிக்பாஸ் வீட்டில் கதை சொல்லும் நேரம் டாஸ்க் பெரும் சண்டைக்கு நடுவே முடிந்துவிட்டது. மொத்தம் 8 போட்டியாளர்கள் மட்டுமே டாஸ்கை முழுமையாக முடித்த நிலையில் மற்றவர்கள் தங்களின் கதைகளை சொல்ல தொடங்குவதற்கு முன்பாகவே ரெட் லைட் ஆன் செய்து வெளியே வர வைத்துவிட்டனர் மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள். தனலட்சுமி, மைனா நந்தினி, ஷிவின் ஆகியோரின் கதைகளை முழுமையாக போட்டியாளர்கள் கேட்டனர். ராபர்ட் மாஸ்டரும் தன்னுடைய வாய்ப்பு வரும்போது மனதில் அடி ஆழத்தில் இருந்த மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’என்னை வெளியேத்துங்க பிக்பாஸ்’ ஜிபி முத்துவை தொடர்ந்து அடம்பிடிக்கும் மற்றொரு போட்டியாளர்


பிரபலமாக இருந்தாலும், தான் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு எதற்காக வந்ததாக வெளிப்படையாக கூறினார். அவர் பேசும்போது, " நான் படிக்கவில்லை. என் குடும்பமே மொத்தமாக டான்ஸ் குடும்பம். நான் பருவ வயதில் அதிக தவறுகளை செய்துவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதேநேரத்தில் அதனை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன். எனக்கு இருக்கும் மிகப்பெரிய வலி என்னவென்றால், நான் இளம் வயதிலேயே மனைவியை பிரிந்துவிட்டேன். அதுவும் கைக்குழந்தையுடன் இருக்கும்போது என் மனைவி என்னைவிட்டு சென்றுவிட்டார்.


எனக்கு பிறந்த மகளை நான் பார்க்கவே இல்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு அவளை பொது இடத்தில் முன்னாள் மனைவியுடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது என் மனைவி, மகளை அன்கிள் என கூப்பிட சொன்னார். அவளும் என்னை அன்கிள் என கூப்பிட்டார். அவளுக்கு நான் அப்பா என்று இதுவரை தெரியாது. என் மனைவியோடு இருப்பவர் என் மகளை நன்றாக பார்த்துக் கொள்வதாக கேள்விபட்டேன். ஆனால், என் மகளுக்கு நான் தான் அப்பா என்று தெரிந்தால் போதும். இறக்கும்போதாவது என் அருகில் வந்து நிற்க வேண்டும்" என கண்ணீர் விட்டு அழுதார். அவரின் இந்த கதை வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களை மட்டுமல்லாது, பார்வையாளர்களையும் நெகிழவைத்தது. 


மேலும் படிக்க | திறமைக்கு இல்லை உடம்புக்குத்தான் மதிப்பு - சிம்பு பட நடிகையின் ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEata