இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணிக்காயிதம் போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கியவர்.  முதல் பட ட்ரைலரின் மூலமே ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்திய இயக்குனர் என்ற பெருமை இவரையே சேரும்.  'ராக்கி' படம் ஒரு பக்காவான கேங்ஸ்டர் படமாகும். இப்படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி, ரோகினி, பிக்பாஸ் புகழ் சிபி, ஜெயக்குமார் ஜானகிராமன், ரவி வெங்கட்ராமன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீசானது.  இப்படத்திற்கு ஆரம்பத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ’நாங்க மிஸ் பண்றோம்’ கண்ணீர்விட்டு அழுத ’83’ படக்குழு


இந்நிலையில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.  இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆம், வந்த தகவல்கள் அனைத்தும் உண்மை, இயக்குனர்  அருண் மாதேஸ்வரனுடன் புதிய படமொன்றில் நடிப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.  மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும், ஓம் நமசிவாய" என்று குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனரும் பதில் ட்வீட் அளித்துள்ளார்.


 



இந்த படமும் கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, இந்த படத்தில் தனுஷை வேறு விதமாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.  இப்படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும்.  முதல் படத்தின் ரிலீசுக்கு முன்னரே தனுஷை வைத்து இயக்கம் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.  இந்தபடம் 70,80 களில் நடக்கும் கதையாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தற்போது தனுஷ், கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'மாறன்' என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.  அதனை தொடர்ந்து இயக்குனர் சேகர் கம்முலாவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது.  மேலும் அவரது அண்ணன் செல்வராகவன் உடன் 'நானே வருவேன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகும் 'வலிமை'!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR