RRR vs Valimai: படத்தின் நீளத்திலேயே தொடங்கிருச்சு Fight!
அடுத்த ஆண்டில் வெளிவரும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களான வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படங்கள், படத்தின் நீளத்திலேயே போட்டியை தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் குதூகலத்துடன் காத்திருக்கின்றனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் மற்றும் வலிமை திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. ஆர்.ஆர்.ஆர் திரைப்படக்குழுவினர் ஏற்கனவே ரிலீஸ் தேதியை அறிவித்து அதற்கான புரோமோஷன் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. ராஜமௌலி என்றாலே பிரம்மாண்டம் என்கிற நிலையில், அவருடன் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவுக்கதிகமாக இருக்கிறது.
மேலும் படிக்க | ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தின் மொத்த நீளம் 3 மணிநேரம் 7 நிமிடங்கள் ஆகும். இந்தப் படத்திற்கு போட்டியாக வலிமை திரைப்படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 மணி நேரம் 58 நிமிடங்கள் 35 விநாடிகள் வலிமை திரைப்படத்தின் மொத்த நீளமாகும். அதாவது 3 மணி நேரம் வலிமை படம் ஓட உள்ளது.
ஏற்கனவே, ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்துக்கும், வலிமையும் களத்தில் மிகபெரிய போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள சூழலில், இரண்டு படங்களுமே 3 மணி நேரம் நீளத்தை கொண்டிருப்பதால், அந்தளவுக்கான பிரம்மாண்டம் காத்திருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக நேற்று வெளியான ’வலிமை’ டீசர் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. மிக சில மணி நேரங்களிலேயே மில்லியன்களில் பார்வைகளைக் கடந்தது. இப்போது, படத்தின் நீளமும் வெளியாகியிருப்பதால், 3 மணி நேர விருந்தைக் காண ரசிகர்கள் குதூகலத்துடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | Oscars 2023: ஆஸ்கார் வென்ற நாட்டு நாட்டுப் பாடலைப் பாடியவர் யார் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR