பாகுபலி என்ற பிரமாண்ட படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கும் படம் RRR.  இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்,  ராம்சரண்,  ஆலியா பட், அஜய் தேவ்கன்,சமுத்திரகனி மற்றும் ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  நீண்ட நாட்களுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா தொற்று மற்றும் திரையரங்கில் 50% அனுமதி போன்ற சிக்கல்களால் தள்ளி போனது.  பின்பு ஒருவழியாக இன்று மார்ச் 25ம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | RRR Box office: 800 கோடி வசூல், பிளாக்பஸ்டர் சாதனை


 


RRR படத்தின் ட்ரைலர் வந்ததில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.  தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களான என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் ஒரே படத்தில் நடைப்பதாலும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமானது.  இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளில் இப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் RRR ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படம் கிட்டதட்ட சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.  மேலும், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகியவற்றின் தியேட்டர் உரிமை 200 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இன்று RRR படத்தை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  பொதுவாக ராஜமௌலி படங்களில் உள்ளது போல இப்படமும் மிகவும் பிரமாண்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.  படத்தின் பாடல்கள் மற்றும் பி.ஜி.எம் கூடுதல் வலுசேர்த்துள்ளது.  


 



 



 



 



மேலும் படிக்க | ஏப்ரல்-1 யூடியூப் ‘ஜாம்’ ஆவது உறுதியாம்! - ஏன் தெரியுமா?!


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR