கோல்டன் குளோப் விருதை வென்றது RRR - சரித்திரம் படைத்த நாட்டு குத்து பாடல்!
Golden Globe 2023: கோல்டன் குளோப் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருதை வென்றுள்ளது.
Golden Globe 2023: கோல்டன் குளோப் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் இன்று நடைபெற்றுகிறது. இந்த நிகழ்வை நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல் தொகுத்து வழங்கினார்.
இந்த கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்ற பெருமையை 'நாட்டு நாட்டு' பாடல் பெற்றிந்தது.
இந்நிலையில், கோல்டன் குளோப் இன்றைய விருது வழங்கும் நிகழ்வில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் கலந்துகொண்டர். இயக்குநர் ராஜமௌலி, ராம்சரன் உள்பட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். அந்த வகையில், இந்தாண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவுக்கான கோல்டன் குளோப் விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. மேடையில் இந்த விருதை ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றுக்கொண்டார்.
கோல்டன் குளோப் விருதை குறிப்பாக இந்த பிரிவில் வாங்கும் முதல் ஆசிய திரைப்படம் என்ற பெருமையை ஆர்ஆர்ஆர் பெற்றுள்ளது. இந்த பாடல் இடம்பெற்றிருந்த இதே பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட மற்ற ஹாலிவுட் பாடல்களுக்கு மத்தியில் நாட்டு நாட்டு பாடல் இந்த விருதை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஆஸ்கரில் வரலாறு படைத்த 'நாட்டு நாட்டு' பாடல்!
கோல்டன் குளோப்ஸ் விழாவில், சிறந்த ஆங்கிலம் அல்லாத மொழித் திரைப்படத்தின் இரண்டாவது பிரிவில் ஆர்ஆர்ஆர் போட்டியிடுகிறது. கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியில் ஆர்ஆர்ஆர் சார்பாக அதன் இயக்குனர் எஸ்எஸ் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் பங்கேற்றிருந்தார். ராம் சரண் தனது மனைவி உபாசனா காமினேனியுடன் இருக்கிறார்.
1920 களில் பிரிட்டிஷ் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவில் சுதந்திரப் போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராமராஜுவாக பாத்திரங்களில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் நடித்திருந்தனர்.
உலகளவில் ரூ. 1,200 கோடிக்கு மேல் வசூலித்த RRR, நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் ராஜமௌலிக்கு சிறந்த இயக்குனர் உட்பட சர்வதேச விருதுகளை ஏற்கனவே வென்று கொடுத்தது. RRR பல்வேறு ஆஸ்கார் பிரிவுகளிலும் பரிசீலனைக்காக சமர்ப்பித்துள்ளது. மேலும் இல்லையெனில் குறைந்தது ஒரு பிரிவில் பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | Varisu Movie: வாரிசு படத்திற்கு இலவச டிக்கெட்... ஆனால் ஒரே ஒரு கண்டீஷன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ