இந்தியாவில் ரூ. 200 கோடி வசூல் செய்த தி ஜங்கிள் புக்
டிஸ்னி நிறுவனம் தயாரித்த இந்திய வம்சாளியை சேர்ந்த நீல் சேத்தி என்ற சிறுவன் நடித்துள்ள படம் "தி ஜங்கிள் புக்" இப்படத்தை ஜான் ஃபேவ்ரூ என்பவர் இயக்கி உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியானது. மிகுந்த வரவேற்பைப் பெற்ற இப்படம்.
முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்தது. படிப்படியாக வசூலை அள்ளிய இப்படம் தற்போது 50 நாள் வரை ஓடியது மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட ரூ. 200 கோடி வசூலித்துள்ளது.
இந்தியாவில் வெளியான அனைத்து ஹாலிவுட் படங்களை விட அதிக வசூல் செய்து சாதனை செய்துள்ளது.