புஷ்பா 2வில் களமிறங்கும் சாய்பல்லவி: சுவாரஸ்யமான கதாப்பாத்திரம்
புஷ்பா 2 படத்தில் சாய்பல்லவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அவருடைய கதாப்பாத்திரம் குறித்த தகவலும் கசிந்துள்ளது.
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸை கலக்கிய திரைப்படம் புஷ்பா தி ரைஸ். தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்டிருந்தாலும், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக் குவித்தது. அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகாவின் சூப்பரான நடிப்பும், திரைக்கதையும் ரசிகர்களை சொக்க வைத்தது. இதனால், 400 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்த மிகப்பெரிய வெற்றி படம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. குறிப்பாக, இந்தியிலும் அமோக வரவேற்பை பெற்றது புஷ்பா.
படம் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்த இயக்குநர் சுகுமார் மற்றும் ஹீரோ அல்லுஅர்ஜூன், உடனடியாக 2வது பாகத்துக்கான பணிகளை தொடங்கினார். அவுட்லைன் தயாராக இருந்த நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து திரைகதை உருவாக்கம் வேகவேகமாக நடைபெற்றது. அல்லு அர்ஜூனும் புஷ்பா 2 படத்துக்கு டபுள் ஓகே சொல்ல, படத்திற்கான பணிகள் வேகமெடுத்தது. முதல் பாகத்தில் இருந்ததுபோலவே ரோலுக்கு ஏற்ற நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருந்த இயக்குநர் சுகுமார், முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
மேலும் படிக்க | உலகநாயகன் கமலஹாசனின் கம்பீரக்குரலில் துவங்கும் பொன்னியின் செல்வன் ட்ரைலர்!
முதல் பாகத்திலேயே விஜய் சேதுபதியை நடிக்க வைக்க இயக்குநர் சுகுமார் முயற்சி எடுத்தபோதும், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்போது முடியாமல் போனது. ஆனால், இரண்டாம் பாகத்தில் கட்டாயம் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறாராம். இதுஒருபுறம் இருக்க அடுத்தடுத்து வெற்றிப் படங்களால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகை சாய் பல்லவியை, புஷ்பா 2-வில் நடிக்க வைக்க முடிவெடுத்து இருக்கிறார் இயக்குநர் சுகுமார். அவருக்கு ஏற்றார்போல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்படிருக்கும் பழங்குடியின பெண்ணாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். சாய்பல்லவி ஓகே சொல்லும்பட்சத்தில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பொண்ணு ஓகே சொல்லிடுச்சு.. பாவ்னி - அமீர் ஜோடிக்கு விரைவில் திருமணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ