சல்மான் கான்-க்கு ஜாமீன் வழங்கியது ஜோத்பூர் கோர்ட்!
மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் மனுவை ஏற்று ஜோத்பூர் கோர்ட் ஜாமீன் வழங்கியது.
15:10 07-04-2018
மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கான் மனுவை ஏற்று ஜோத்பூர் கோர்ட் ஜாமீன் வழங்கியது.
14:02 07-04-2018
சல்மான்கான் ஜாமீன் குறித்து உணவு இடைவேளைக்கு பிறகு 2 மணிக்கு முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்று எதிர்பார்த்த நிலையில், ஜாமீன் மீதான விசாரணை மீண்டும் ஒரு மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது.
11:14 07-04-2018
சல்மான்கான் ஜாமீன் குறித்து உணவு இடைவேளைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்று நண்பகல் 2 மணிக்கு தான் தெரியும்.
11:03 07-04-2018
இன்று மீண்டும் சல்மான் கானின் ஜாமீன் மீதான விசாரணை தொடங்கியதும், இருதரப்பு தங்கள் வாதங்களையும் நீதிபதி முன்னிலையில் எடுத்து வைத்தனர். அப்பொழுது சல்மான் கான் தரப்பு வக்கீல், சல்மான் கான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவரை இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் எனக் கூறினார். ஆனால் அரசு தரப்பு வக்கீல் சல்மான் கானுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என கூறினார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, உணவு இடைவேளைக்கு பிறகு, ஜாமீன் மீதான விசாரணை தொடங்கும் என தெரிவித்தார்.
10:49 07-04-2018
சல்மான் கானின் ஜாமீன் மீதான விசாரணை தொடங்கியது. மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி மனுவை விசாரித்து வருகிறார்.
ராஜஸ்தானில் 1998-ம் ஆண்டு ‘ஹம் சாத் சாத் ஹே’ (Hum Saath - Saath Hain) படப்பிடிப்பின் போது அரிய வகை இரண்டு மான்களை வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு கடந்த 5-ம் தேதி ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் மற்றும் நடிகர் சயீப் அலி கான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.
தீர்ப்பை அடுத்து, சிறைச்சாலை சென்ற சல்மான்கானுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின் அவரை சிறை வார்டு 2-ல் அடைக்கப்பட்டனர். பின்னர் அவருக்கு கைதி எண் 106 வழங்கப்பட்டது. அவர் அடைக்கபட்டுள்ள சிறை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மான்வேட்டையாடிய வழக்கு: சல்மானுக்கு 5 ஆண்டு சிறை!
அன்றே சல்மான் கான் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அடுத்த நாள் அந்த மனு விசாரணைக்கு வந்ததும் சல்மான் கானின் வக்கீல், சிறையில் அவரது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். பின்னர் இந்த மனு மீதான உத்தரவு சனிக்கிழமை (ஏப்ரல் 7) வழங்கப்படும் என நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி தெரிவித்தார்.
கைதி எண் 106-ல் அடைக்கப்பட்ட சல்மான்கான் மனுதாக்கல் செய்தார்
இந்நிலையில், இன்று பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சல்மான் கானின் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி திடிரென சீரோஹிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சந்திரகுமார் சோனக்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் இன்று பதவி ஏற்பாரா என்பது குறித்து தெளிவான தகவல் வரவில்லை. புதிய நீதிபதி சந்திரகுமார் சோனகரா இன்று பொறுப்பேற்கவில்லை என்றால் சல்மான் கான் இந்த வார இறுதி வரை சிறைச்சாலையில் தான் இருக்க வேண்டும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்தம் 87 நீதிபதிகளை இடமாற்றம் செய்துள்ளது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம். 20 நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது.