Salman Khan On Women Dress Code: சல்மான் கான் தற்போது ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியான 'கிசி கா பாய் கிசி கி ஜான்' திரைப்படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ளார். அந்த படத்தின் பிரமோஷனின் போது, நடிகை பாலக் திவாரி, படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் அணியும் உடைகள் மீது விதிக்கப்பட்டுள்ள விதி குறித்து கூறியிருந்தார், இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் ஒரு பேட்டியில் அதற்கு சல்மான் கான் பதிலளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதிப்புமிக்கது


மும்பையில் நேற்று நடைபெற்ற பட நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்துகொண்டார். அவரது படப்பிடிப்பு தளத்தில் பெண்கள் உடை மீது கூறப்பட்டுள்ள விதி குறித்து சல்மான் கானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது,"பெண்களின் உடல்கள் மிகவும் மதிப்புமிக்கது என்று நான் நினைக்கிறேன். எவ்வளவு அதிகமாக அவர்களின் உடல் மூடப்படுகிறதோ, அவ்வளவு சிறந்தது" என பதிலளித்தார்.


அது வேறு காலம்


அவரின் 'ஓ ஓ ஜானே ஜானே' பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அந்த பாடலில், சல்மான் கான் சட்டையின்றி நடித்திருந்தார். ​இதுகுறித்து நடிகர் பதிலளித்தார்,"அந்தப் பாடலில் நான் நீச்சல் உடையை அணிந்திருந்தேன். அது வேறு காலம். தற்போது சூழல் கொஞ்சம் மாறியுள்ளது. இது பெண்களைப் பற்றியது அல்ல. ஆண்களைப் பற்றியது. ஆண்களின் தோற்றம் பெண்களிடம், உங்களுக்குத் தெரியும், உங்கள் சகோதரிகள், உங்கள் மனைவிகள், உங்கள் தாய்மார்கள்... எனக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் இந்த அவமானத்தைச் சந்திப்பதை நான் விரும்பவில்லை.


மேலும் படிக்க | பிரேக் எடுக்க போகிறேன்..சிவகார்த்திகேயன் ட்வீட், ரசிகர்கள் அதிர்ச்சி


சல்மான் கான் இறுதியாக, "நீங்க ஒரு கண்ணியமான படத்தை எடுக்கும்போது, எல்லோரும் குடும்பத்துடன் அதைப் பார்க்கச் செல்கிறார்கள். நாம் ஒரு படம் தயாரிக்கும் போது நமது கதாநாயகிகளையும், பெண்களையும் அப்படிப் பார்க்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.


இது வீரம் ரீ-மேக்


ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் டக்குபதி வெங்கடேஷ் ஆகியோருடன் ராகவ் ஜூயல், பாலக் திவாரி, ஜாஸ்ஸி கில், ஷெஹ்னாஸ் கில், வினாலி பட்நாகர் மற்றும் சித்தார்த் நிகம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.151.12 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த படம், அஜித் - சிறுத்தை சிவாவின் கூட்டணியில் வெளிவந்த 'வீரம்' படத்தின் ரீ-மேக் என்பது நினைவுக்கூரத்தக்கது.


இதற்கிடையில், சல்மான் கான் அடுத்ததாக மனீஷ் ஷர்மாவின் ஸ்பை த்ரில்லர் படமான 'டைகர் 3'-இல் நடிக்கிறார். அதில் அவர் கத்ரீனா கைஃப் உடன் நடிக்கிறார். இப்படத்தில் ஷாருக்கானும் கேமியோ செய்கிறார். இப்படம் நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


மேலும் படிக்க | தளபதி 68 படத்தின் முக்கியமான அப்டேட்டை கூறிய நடிகர் ஜீவா! இயக்குனர் இவர் தானா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ