பிக் பாஸ் இல்லத்தில் சூப்பர் சிங்கர் பிரபலம்; யார் அது?
பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் சூப்பர் சிங்கர் பிரபலம் ஒருவர் விசிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். வழக்கம்போல் விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர், அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். அதுபோக, யூடியூப் பிரபலம், நியூஸ் ரீடர் ஒருவர், டான்ஸ் மாஸ்டர், வெள்ளித்திரையை சேர்ந்த ஒருவர், மாடலிங்கில் இருக்கும் இரண்டு பேர் என மொத்தம் 21 பேர் இந்த முறை களமிறக்கப்பட இருக்கின்றனர்.
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த ரக்ஷிதா, நடிகை மைனா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஜிபி முத்து, சூப்பர் மாடல் ஷெரீனா, மெட்டி ஒலி சாந்தி, நடன இயக்குநர் மணிகண்டன், விஜே கதிரவன், நடிகை விஷித்ரா ஆகியோரின் பெயர்கள் டாப் லிஸ்டில் அடிபடுகிறது. மேலும் இந்த முறை இந்த நிகழ்ச்சியில் பொது மக்களும் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் சூப்பர் சிங்கர் பிரபலம் கலந்து கொண்டிருக்கும் தகவல் வெளியாகிறது. அவர் வேறு யாருமில்லைங்க, சாம் விஷால் ஆவார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் சாம் விஷால் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ