கணவரை பிரிந்த பின் திரைப்படங்களில் முழுக்கவனத்தை செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. தற்போது இவர் தமிழ், தெலுங்கில் மும்மரமாக நடித்து வருகிறார். அதிலும் நாயகி மையப் படங்களில் அவர் அதிகம் கவனம் செலுத்தி நடிக்கிறார். இதைத் தவிர இந்தி திரைப்படம், வெப் தொடர்களிலும் இவர் நடித்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் இந்த வருடம் வந்த Family Man 2 இல் சமந்தா (Samantha Ruth Prabhu) நடித்த கதாபாத்திரம் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்று தந்திருக்கிறது.


ALSO READ | KaathuVaakula Rendu Kaadhal: சமந்தா லுக் இதான்; வெளியானது 2வது லுக்


இந்நிலையில் தற்போது Downton Abbey, Outlander, Iron Fist போன்ற பிரபல வெப் சீரிஸை இயக்கிய பிலிப் ஜான் இயக்கத்தில் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா. "The Arrangements of Love" என்ற இந்தப் படத்தில் நடிப்பது குறித்த செய்தியை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார். இதன் மூலம் சர்வதேச திரையுலகில் கால்தடம் பதிக்கிறார். 2004 இல் வெளியான, திமேரி என்.முராரி எழுதிய 'அரேன்ஜ்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற நாவலை அடிப்படையாக வைத்து அதே பெயரில் ஒரு படத்தை பிலிப் ஜான் இயக்குகிறார்.


 



 


இந்த நாவலில் வரும் இளம் பெண் இருபால் உறவு கொள்கிறவராக வருவார். நாவல் வெளியான போது இந்த கதாபாத்திரம் பிரதானமாகப் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். அதன்படி நடிகை சமந்தா பிலிப் ஜானுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்ததுடன், கடைசியாக 2009 இல் 'இ மாய சேஷவ்' படத்துக்காக ஆடிசனில் கலந்து கொண்டதாகவும், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பதட்டத்தை ஆடிசனின் போது அனுபவப்பட்டதாகவும் கூறியுள்ளார். 


இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருட ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR