தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சந்தியா ராகம்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சந்தியா ராகம் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷாருவை ரகுராம் வீட்டில் தங்க வைக்க பார்வதி பிளான் போட்டு சம்மதம் வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


டைரியை கொண்டு வரும் மாயா


அதாவது, மாயா டைரியை கொண்டு வந்து ரகுராம் முன்பாக வைத்திருக்க அவரும் அதை எடுக்க போன சமயத்தில் போட்டோ கீழே விழ மாயா எடுக்க போக சீனு முந்தி கொண்டு எடுத்து விடுகிறான், உடனே மாயா நீ போட்டோ ஒன்னும் காட்ட வேண்டாம், யாரை காதலிக்கிறேன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்று சொல்கிறாள். இவர்கள் பேசி கொண்டதை பார்த்து கடுப்பாகும் ஷாரு மாயாவை வெளியே துரத்துறேன் என மனதுக்குள் சபதம் எடுக்கிறாள்.


அடுத்ததாக ரமணியம்மா நாளைக்கு நோன்பு அதற்கான ஏற்பாடுகளை செய்யணும் என்று சொல்ல எல்லாரையும் இம்ப்ரெஸ் செய்ய பிளான் போடும் ஷாரு எல்லாவற்றையும் நானே கவனித்து கொள்கிறேன் என்று சொல்கிறாள். எல்லாரும் தனம் தான் எப்பவும் கோலம் போடுவா, அவளை மாதிரி யாராலும் போட முடியாது என்று சொல்ல அதை கோலம் போட்டு முடித்த பிறகு சொல்லுங்க என்று சொல்கிறாள்.


நோன்பிற்கான ஏற்பாடுகள்


பிறகு  நோன்பிற்கான ஏற்பாடுகள் நடக்க தனம் ஒரு பக்கமும் ஷாரு ஒரு பக்கமும் கோலம் போட தொடங்குகின்றனர். மாயா தனத்திற்கு உதவ ஷாரு தனியாக இருக்க சீனு கலர் பவுடர்களை கொண்டு வர அதை பார்த்து பார்வதியும் பத்மாவும் உனக்கு உதவ தான் சீனு வரான் என்று சொன்னதும் ஷாரு சந்தோசப்படுகிறாள். 


மேலும் படிக்க | Lal Salaam: ‘லால் சலாம்’ ரஜினிகாந்தின் சம்பளம்..கேமியோ ரோலில் நடிக்க ‘இத்தனை’ கோடியா?


கடைசியாக சீனு இவர்களை கடந்து மாயா மற்றும் தனத்திற்கு உதவ ஷாரு கடுப்பாக மாயா தனத்திற்காக தான் இங்கே வந்தான் என்று வழக்கம் போல் தவறாக புரிந்து கொள்கிறாள். எல்லாரும் தூங்கிய பிறகு தன்னை விட தனம் கோலத்தை நன்றாக போட்டிருப்பதை பார்த்த ஷாரு மோட்டார் போட்டு விட்டு கோலத்தை களைய செய்து விடுகிறாள். 


ஷாரு எங்கேயோ சென்று வருவதை மாயா பார்த்து விட மறுநாள் எல்லாரும் முதல் வேலையாக கோலத்தை பார்க்க வெளியே வருகின்றனர். முதலில் ஷாரு கோலத்தை பார்த்து எல்லாரும் பாராட்டுகின்றனர். பிறகு தனத்தின் கோலத்தை பார்க்க அது முழுவதும் தண்ணீரால் கலைந்து கிடக்க தனம் கண் கலங்கி அழுகிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சந்தியா ராகம்: சீரியலை எங்கு பார்ப்பது?


சந்தியா ராகம் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | மலை போல் குவியும் பணம்.. 2024ல் எகிறும் த்ரிஷாவின் சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ