Sandhya Raagam TV Serial (Zee Tamil Inputs): தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீனுவும் மாயாவும் ஜோடியாக லிங்கம் வீட்டிற்கு கிளம்பி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது, மணிவண்ணனுக்கு விக்கல் வர அவன் ப்ரிட்ஜ் வாட்டரை கேட்க வேலைக்காரி தண்ணிக்கு பதிலாக லிங்கம் மிக்ஸ் செய்து வைத்திருந்த சரக்கை கொண்டு வந்து கொடுத்து விடுகிறாள். இதை பார்த்து பதறும் லிங்கம் அதை குடிக்க வேண்டாம் என்று சொல்ல மணிவண்ணன் பரவாயில்ல சம்மந்தி என்று குடிக்க போக அது சோடா என்று சொல்லி குடிப்பதை தடுக்க முயற்சிக்கிறான் லிங்கம்.


ஆனால் மணிவண்ணன் சோடாவா ரொம்ப நல்லதா போச்சு, நெஞ்செரிச்சலா இருக்கு என்று குடிக்க அது சரக்கு என்று தெரிந்ததும் இது சோடா இல்ல ஸ்பெஷல் சோடா என்று முழுசா குடித்து விட்டு போதை ஏறியதும் மாயா சீனு காதல் குறித்து சொல்ல முடிவெடுத்து சொல்ல வர மாயாவும் சீனுவும் ஜோடியாக வருகின்றனர்.


பார்வதி அவளை எதுக்கு கூட்டிட்டு வந்த என்று கேட்க பத்திரிக்கை கொடுக்க ஒண்ணா போய் இருந்தோம் என்று சொல்கிறான். பார்வதி அவனை தனியாக அழைத்து சென்று திட்ட அங்கு வந்த மணிவண்ணன் புள்ளைய எதுக்கு திட்டுற என்று சீனுவை கூட்டிக் கொண்டு வந்து விடுகிறான்.


அடுத்து சீனு கோபப்பட்டு வெளியே கிளம்ப மாயா அவனை தடுத்து நிறுத்த இதை ஷாரு பார்க்க அவளுக்கு பின்னாடி நின்ற பத்மாவும் பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். மணிவண்ணன் போதையில் சீனுவுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, அவன் மாயாவை தான் காதலிக்கிறான் என்று சொல்லி ஷாக் கொடுக்க அங்க சீனு மாயாவிடம் எப்போ உன்னோட கல்யாண ஏற்பாடு எல்லாம் நடந்து கல்யாணம் நடக்காமல் போச்சோ அப்பவே என்னுடைய வாழ்க்கை நாசமா போச்சு என்று புலம்ப இதையும் கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். 


இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க - தாலியை வைத்து ஷாக் கொடுத்த ரம்யா.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ