25 years of `பாயசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்`! வைரலாகும் சூர்ய வம்சம்!
நடிகர் சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அது குறித்த நினைவலைகளை பலர் ஷேர் செய்துவருகின்றனர்.
சூர்ய வம்சம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. சரத்குமார், தேவயானி, ராதிகா, ப்ரியா ராமன், ஆனந்தராஜ், மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
வழக்கமான விக்ரமன் படங்களைப் போலவே குடும்ப சென்டிமென்ட், காதல் நகைச்சுவை, ஆக்ஷன், லாலாலா வகைப் பாடல்கள் என முழுமையான பேக்கேஜாக வந்த இப்படம் 90ஸ் கிட்ஸுக்கு மறக்க முடியாத நாஸ்டாலஜியா என்றே சொல்லலாம்.
இப்படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகியான தேவயானி, மீந்துபோன இட்லியை வைத்து உப்புமா செய்வதுபோன்ற ஒரு காட்சி வரும். இட்லி உப்புமா ஏற்கெனவே புழக்கத்தில் இருந்துவந்ததுதான் என்றாலும், இப்படம் வெளியான பிறகு இட்லி உப்புமா பட்டி தொட்டியெங்கும் அதிகமாக பாப்புலர் ஆனது. படம் வெளியான சமயத்தில் ஊரே அந்த இட்லி உப்புமாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தது.
அதேபோல இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு காட்சியான ‘பாயசம்’ சீன், படம் வந்தபோதுகூட அவ்வளவு பாப்புலர் ஆகவில்லை. ஆனால் இன்றுள்ள சோசியா மீடியா ட்ரெண்டில் அந்தக் காட்சி ரொம்பவே பாப்புலர். ‘பாயசம் சாப்பிடுங்க ஃபிரண்ட்’ எனும் வசனம், மீம் கிரியேட்டர்களுக்கான கன்டென்டாகவே மாற வழி அமைத்துக் கொடுத்தது அந்த பாயசம் சீன்.
அது மட்டுமல்ல, ‘சின்ராசைக் கையிலயே பிடிக்க முடியாது’ என இன்று பலர் பயன்படுத்தும் வசனமும்கூட இந்த சூர்ய வம்சத்தில் இடம்பெற்றதுதான். அதேபோல தந்தையைப் பற்றி மகன் மேடையில் பெருமையாகக் கூறும் சீனை, போன வாரம் வந்த தந்தையர் தினத்தில்கூட பலரும் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்துவந்தனர். இப்படியாகப் பல வகைகளில் அப்படம் இன்றளவும் பேசுபொருளாகவே இருந்துவருகிறது.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா?
படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி நடிகர் சரத்குமாரும் ட்விட்டரில் இதைப் பதிவு செய்துள்ளார். சூர்ய வம்சத்தைக் கொண்டாடிய ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ள சரத்குமார், இதுபோன்ற ஒரு படத்தை மீண்டும் ரசிகர்களுக்கு வழங்க கடுமையாக உழைப்பேன் எனவும் மனம் திறந்துள்ளார். ரசிகர்கள் பலரும் சூர்ய வம்சம் படத்தை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | சாதாரண விஜய்யை 'சாம்ராட்' விஜய்யாக மாற்றிய 5 படங்கள்! # HBD Vijay
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR