தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நேற்று முன்தினம் நடத்திய தியான புரட்சிக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்டம் கண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அப்போது கவர்னர் வித்யாசாகர் ராவ் ஊட்டியில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து வந்தார். அவர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சென்னைவராமல், நீலகிரி மாவட்ட நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்றார்.


6-ம் தேதி காலை டெல்லியில் மத்திய அமைச்சர் ஒருவரது குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அன்றிரவு அவர் சென்னை திரும்பி ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


இது குறித்து குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில்:-


"கிட்டத்தட்ட கடத்தப்பட்டதுபோல் சொகுசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட 131 எம்.எல்.ஏ.க்கள் பற்றிதான் எனது எண்ணங்கள் விரிகின்றன.


ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா? சிறைச்சாலையில் இருக்கும் குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பணமா? அதிகாரமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.