இந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த KGF -2 திரைப்படம் வெளியிடப்படுவதற்கு முன்பே, செயற்கைக்கோள் உரிமைகளுக்காக தயாரிப்பாளர்களுக்கு ரூ.100 கோடி சம்பாதித்து கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமேசான் பிரைம் வீடியோக்களிடமிருந்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளுக்காக KGF  தயாரிப்பாளர்கள் ரூ.54 கோடி சம்பாதித்ததாக அண்மையில் வெளியான தகவல்களுக்குப் பிறகு, தொலைக்காட்சியில் அதன் தொடர்ச்சியை ஒளிபரப்ப செயற்கைக்கோள் உரிமைகளுக்கு ரூ.120 கோடி பெற்றுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்திய நகரங்கள் முழுவதும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புர் ஒரு பிரபல தொலைகாட்சி ஒளிபரப்பாளர்களுக்கு திரைப்படம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், பான்-இந்தியா வெளியீட்டிற்கு ரூ.100 கோடி தயாரிப்பாளர்களுக்கு பெற்று தந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


KGF அத்தியாயம் 2 -ன் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற அனைத்து மொழிகளுக்கும் உரிமைகளை இந்த தொலைகாட்சி பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.


கொரோனா முழு அடைப்பால் திரையரங்குகள் செயல்பாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், முழு அடைப்பிற்கு பின்னரும் திரையரங்குகளில் ரசிகர்கள் வரவு குறையும் என கணித்து தொலைகாட்சியில் இந்த திரைப்படத்தை வெளியிட்டு தங்கள் TRB ரேட்டிங்களை உயர்த்த நிறுவனம் முயற்சித்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த படம் தீபாவளி சீசனுடன் ஒத்துப்போக அக்டோபர் 23 அன்று வெளியிடப்பட திட்டமிடப்பட்டது. ஆனால் முழு அடைப்பாலும், கொரோனா வைரஸுடன் மக்கள் இன்னும் போராடி வருவதாலும்  திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் வெளியிடுவதில் சில மாற்றங்களை கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.