லக்கி பாஸ்கர் வரிசையில் மற்றொரு படம்! ஜீப்ரா திரைவிமர்சனம்!
Zebra Movie Review: ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்யதேவ், டாலி தனஞ்சயா, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ஜீப்ரா படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எஸ்.என்.பால சுந்தரம், எஸ்.என்.ரெட்டி, தினேஷ் சுந்தரம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள படம் ஜீப்ரா. நடிகர் சத்யதேவ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேங்கிங் சம்பத்தப்பட்ட குற்றங்களின் பின்னணியில் க்ரைம் த்ரில்லர் வடிவில் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் கன்னட நடிகர் டாலி தனஞ்சயவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு மொழியில் உருவான இப்படம் தமிழ், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சத்யதேவ், டாலி தனஞ்சயா தவிர ஜீப்ரா படத்தில் சத்யராஜ், பிரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா அகல, ஜெனிஃபர் பிசினாடோ, அம்ருதா ஐயங்கார் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் படிக்க | கம்பேக் கொடுத்துள்ள கார்த்திக் நரேன்! நிறங்கள் மூன்று படத்தின் திரை விமர்சனம்!
சூர்யா (சத்யதேவ்) ஒரு வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவரும் சுவாதியும் (ப்ரியா பவானி சங்கர்) நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இருப்பினும் சுவாதியைப் பற்றி பெற்றோரிடம் சொல்லும் தைரியம் சூர்யாவுக்கு இல்லை. சூர்யா சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். இதற்காக தான் வேலை செய்யும் வங்கியில் லோனும் அப்ளை செய்கிறார். இந்த சூழ்நிலையில் சுவாதி ஒரு சிறிய பிரச்சனையில் சிக்க, அதில் இருந்து அவரை காப்பாற்றுகிறார் சூர்யா. ஆனால் அது சூர்யாவின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக மாற்றுகிறது. நான்கு நாட்களில் ஆதிக்கு (டாலி தனஞ்சயா) 5 கோடி கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை சிக்குகிறார். இதற்காக வங்கியை கொல்லை அடிக்க வேண்டும் என்று துணிகிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே ஜீப்ரா படத்தின் கதை.
இப்படி ஒரு படத்தை யோசித்து அதனை படமாக கொடுத்துள்ள இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக்கிற்கு தனி பாராட்டுக்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற சுவாரஸ்யம் எழுகிறது. ஆரம்பக் காட்சியில் சூர்யாவின் கதாபாத்திரத்தை சுற்றி நடக்கும் சில காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக 4 நாட்களில் 5 கோடியை தயார் செய்வதற்கு சூர்யா எடுக்கும் முயற்சிகளும், இதனால் கதையில் புதிதாக வரும் கதாபாத்திரங்களும் நன்றாக இருந்தது. சத்யதேவின் கதாபாத்திரம் படத்தில் முக்கியமானதாக உள்ளது, அதனை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சில நகைச்சுவை காட்சிகள் படம் முழுக்க நன்றாக ஒர்க் ஆகி இருந்தது. சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்சயாவை இடையே நடக்கும் அனைத்து காட்சிகளும் சிறப்பாக இருந்தது.
சத்யராஜ் பாபா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அம்ருதா ஐயங்கார் மற்றும் பிற முக்கிய நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசையில் அசத்தி உள்ளார். படம் முழுக்க எடிட்டிங் நன்றாக இருந்தாலும், ஒரு 10 நிமிடத்தை வெட்டி இருக்கலாம். சத்யா பொன்மரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. சத்யதேவ் மற்றும் டாலி தனஞ்சயாவின் கதாபாத்திரங்கள் சுவாரசியமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்கிறது. ஹீரோயின் கதாபாத்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டு இருந்திருக்கலாம். ஒரு சாதாரண வங்கி ஊழியர் 4 நாட்களில் 5 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலையில் அவரது மனநிலை எப்படி இருக்கும்? இது போன்ற பிரச்சினைகளை எப்படி கையாள்கிறார் என்பதை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்து இருக்கலாம்.
மேலும் படிக்க | ஹரி ஷங்கர் நடித்துள்ள பராரி படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ