தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதா ராமன் : இன்றைய எபிசோட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கல்பனா சீதாவை மாடியில் இருந்து பிடித்து தள்ளிவிட பிளான் போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


அர்ச்சனா மீது சந்தேகப்படும் மகா


அதாவது, கல்பனா அர்ச்சனாவிடம் பியூஸை பிடுங்க சொல்ல அவளும் அப்படியே செய்ய கரண்ட் கட் ஆனதும் சீதாவை பிடித்து கீழே தள்ள போக கடைசியில் கல்பனாவே விழுந்து விடுகிறாள். எல்லாரும் கூடி விட தவறி விழுந்து விட்டதாக சொல்லி சமாளிக்க மகாவுக்கு ஏதோ பிளான் போட்டு இருக்காங்க என்ற சந்தேகம் வருகிறது. 


பிறகு செக்யூரிட்டியாய் கூப்பிட்டு கரண்ட் கட் ஆனதும் என்ன பிரச்சனை என்பதை நீ பார்த்து இருக்கனும்ல, ஏன் பார்க்கல என்று கேட்டு கோபப்பட பிறகு விரதத்தில் இருப்பதை நினைத்து தனது கோபத்தை கட்டுப்படுத்தி கொள்கிறாள். அர்ச்சனாவை கூப்பிட்டு வைத்து என்னமோ பிளான் பண்ணி தான் இப்படி பண்ணி இருக்கீங்க, என்னனு நீங்களே சொல்லிடுங்க கோபப்பட மாட்டேன் என்று சொல்லி நகர்கிறாள். 


மேலும் படிக்க | 2023ல் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள்!


மயங்கி விழும் மகா


அடுத்து சாப்பிடாமல் விரதம் இருக்கும் மகா மயங்கி விழ டாக்டரை வீட்டுக்கு வரவைக்க அவர் சீதாவுக்கு என்னாச்சு என்று கேட்க மகாவுக்கு தான் மயக்கம் என்று சொல்ல டாக்டர் மகாவை செக்கப் செய்து விட்டு ரொம்ப வீக்காக இருக்காங்க, எதுக்கு இந்த விரதம் எல்லாம் என்று கேட்க கல்பனா உண்மையான காரணத்தை நான் சொல்றேன் என்று சொல்ல மகா அதிர்ச்சி அடைகிறாள். 


காணத்தவறாதீர்கள்


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | Salaar Review: சலார் முதல் விமர்சனம்.. பாக்ஸ் ஆபிஸில் கெத்தா? எப்படி இருக்கு படம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ