சீதா ராமன் அப்டேட்: சீதாவை பழி தீர்க்க மகா போடும் பிளான்.. ராம் எடுத்த அதிரடி முடிவு
Seetha Raman Today`s Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.
சீதா ராமன் : இன்றைய எபிசோட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மகா சீதா. மீரா இருவரிடமும் நல்லபடியாக பேசி டிராமா போட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, சீதாவும் மீராவும் ராமிடம் வந்து அவங்க பேசறதையெல்லாம் நம்மிடதீங்க பாஸ், அது பாசத்துல பேசுறது கிடையாது என்று சொல்லி ஏன் நீங்க ஐதராபாத் போகல என்று கேட்க எனக்கு போக பிடிக்கல, என்னால் பழசு எதையும் மறக்க முடியல என்று சொல்லி உள்ளே சென்று விடுகிறான்.
நீ எதையும் மறக்கலயா? என கேட்கும் ராம்
அதனை தொடர்ந்து இரவு சீதா ரூமில் பாயை விரித்து உட்கார்ந்திருக்க ராம் இங்க தான் மெத்தை இருக்கே, அப்புறம் எதுக்கு பாயை போட்டிருக்க என்று சொல்ல சீதா இந்த பாய் தானே நம்மள சேர்த்து வச்சது என வெக்கத்தோடு பேச ராம் நீ எதையும் மறக்கலயா? நானும் எதுவும் மறக்கல, மறக்கவும் முடியாது என்று பேசுகிறான்.
பிறகு இந்த ஐதராபாத் விஷயம் குறித்து கேட்க அவன் நீ தானே பிசினஸ் பண்ண வேண்டாம்னு சொன்ன அதனால் தான் போகல என்று சொல்ல சீதா போலீஸ் ட்ரெஸ்ஸை எடுத்து கொடுத்து IPS ஆக முயற்சி செய்ய சொல்கிறாள், ராமும் என்னுடைய கனவை எனக்கு திரும்ப திரும்ப ஞாபகப்படுத்துறது நீ தான் என்று சொல்கிறான்.
மேலும் படிக்க | டி.இமான் விவாகரத்துக்கு SK தான் காரணமா...? முழு பின்னணி என்ன?
பிசினஸ் செய்ய போவதில்லை என கூறும் ராம்
அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ராம் சேதுவை நடக்க வைக்க பயிற்சி கொடுக்க அவர் ஐதராபாத் ஆபிஸ் குறித்து பேச சுபாஷும் அங்கு வந்து பேச ராம் பிசினஸ் செய்ய போவதில்லை என உறுதியாக சொல்கிறான், உடனே சேது உன்னுடைய பியூஷர் பிளான் என்ன என்று கேட்க சீதாவும் மீராவும் IPS குறித்து சொல்ல சொல்கின்றனர். ஆனால் ராம் இப்போதைக்கு எப்படி அதை பத்தி சொல்ல முடியும்? என்னால அப்பாவை விட்டுட்டு போக முடியாது என்று சொல்கிறான்.
மீரா இது தான் சரியான சந்தர்ப்பம் என்று புத்திமதி சொல்ல ராம் நேரம் பார்த்து பேசுவதாக சொல்கிறான். இதையெல்லாம் மகாவும் அர்ச்சனாவும் கேட்டு விட அர்ச்சனா, ராம் போலீஸ் ஆக கூடாது, அப்புறம் அந்த தையல்காரி ஜெயித்த மாதிரி ஆகிரும் என்று சொல்ல மகா ராமை IPS பயிற்சிக்கு அனுப்பி வைத்து சீதாவுக்கு நரகத்தை காட்டி இந்த வீட்டை விட்டு துரத்த போவதாக திட்டத்தை சொல்கிறாள்.
மீராவை வழியனுப்பும் சீதா
அடுத்து மீரா வீட்டிற்கு கிளம்புவதாக சொல்ல சேது கண் கலங்க சீதா இருவருக்கும் ஆறுதல் சொல்ல அங்கு வரும் மகா ஏன் மீரா அதுக்குள்ள கிளம்பிட்ட? இது உன்னோட வீடு. நீ எப்ப வேணும்னாலும் வரலாம், போலாம் என்று சொல்லி செய்த தவறுகளுக்காக போலியாக மன்னிப்பு கேட்கிறாள். பிறகு சீதா மீராவை வழியனுப்பி விட்டு திரும்ப அர்ச்சனா அங்கு நிற்க இருவரும் நேருக்கு நேராக முறைத்து கொள்கின்றனர்.
காணத்தவறாதீர்கள்
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?
சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
மேலும் படிக்க | லியோ படத்திற்கு 4 மணி காட்சி? முக்கிய உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ