Seetha Raman Today Episode Update: தொலைக்காட்சி சீரியல்கள் பலரின் அன்றாட வாழ்வில் பிரிக்க இயலாத ஓர் அங்கமாகிவிட்டது. தினசரி தொடராக வரும் தொலைக்காட்சி சீரியல்களுக்கும், அதன் நடிகர், நடிகைகளுக்கும் வெள்ளித்திரை நட்சத்திரங்களை மிஞ்சும் அளவுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருக்கிறது எனலாம். அந்த வகையில், ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி சீரியல்களில் ஒன்று 'சீதாராமன்'.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீதாராமன் தொடர், தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஆகும். இந்த சீரியலில் சீதா கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்க ராம் சீதாவை வெளியே விடமாட்டேன் என மறுப்பு தெரிவிக்க இன்று (ஜன. 29) நடக்கப் போவது என்ன என்பது குறித்து இதில் காணலாம்.


மேலும் படிக்க | Anna Serial: பாண்டியம்மா போடும் திட்டம் - அண்ணா சீரியல் அப்டேட்!


அதாவது ராஜசேகர் சேதுபதி மீரா என எல்லோரும் சீதாவுக்கு ஆதரவாக ராமிடம் அவன் வாக்குவாதம் செய்ய, ராம் ஆதாரங்கள் எல்லாம் சீதாவுக்கு எதிராக தான் இருக்கிறது என சொல்லி விடுகிறான். பிறகு இவர்கள் சீதாவை பார்க்க வழக்கறிஞர் உடன் ஜெயிலுக்கு வர, ஏற்கனவே நாம் யார் வந்தாலும் சீதாவை பார்க்க அனுமதிக்க கூடாது என சொல்லி வைக்க போலீசில் இவர்களை பார்க்க அனுமதி மறுக்க பிறகு சண்டையிட்டு சீதாவை பார்த்து தைரியம் சொல்கின்றனர். 


சீதாவும் தைரியமாக இருப்பது போல பேசுகிறாள். அதன் பிறகு சீதா கடவுளிடம் இது என்னுடைய கணவருடன் முதல் கேஸ் தப்பா எதுவும் நடக்கக் கூடாது என வேண்டிக்கொண்டதாக போலீஸில் ஒருவர் ராமிடம் வந்து சொல்ல அவன் வருந்துகிறான். 


பிறகு ஜெயிலரிடம் சீதா தன்னுடைய மனைவி என்று பத்திரமாக பார்த்துக்க சொல்லி ராம் ஜெயிலுக்குள் அனுப்பி வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய சீதாராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


சீதா ராமன்: எங்கு பார்ப்பது?


சீதா ராமன் சீரியல் 2023ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5-ல் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | இதயம் சீரியல்: முதல்முறையாக பாரதியை வெறுக்கும் ஆதி.‌. காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ