ஆயிரத்தில் ஒருவனா; புதுப்பேட்டையா?.. எதன் இரண்டாம் பாகம் முதலில் - செல்வராகவன் அளித்த பதில்
ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 குறித்த அப்டேட்டை இயக்குநர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை. தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் வெளியானபோது போதிய அளவிலான வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலம் செல்ல செல்ல புதுப்பேட்டையை ரசிகர்கள் தமிழின் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடிவருகின்றனர். அவ்வப்போது புதுப்பேட்டை படம் மீண்டும் தியேட்டரிகளில் ரிலீஸான கதையும் உண்டு.
தற்போது வேண்டுமானால் படத்தை இரண்டாம் பாகத்துக்கான லீடை வைத்து முடிப்பது வழக்கமாக இருக்கலாம். ஆனால் இந்த நடைமுறையை தமிழில் செல்வராகவன் புதுப்பேட்டை படத்தில் அப்போதே பயன்படுத்தியிருந்தார். இதனால் புதுப்பேட்டை கொக்கி குமாரு மீண்டும் எப்போது வருவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருக்கிறது.
அதேபோல் கடந்த 2010ஆம் ஆண்டு கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்ளிட்டோரை வைத்து செல்வராகவன் இயக்கி வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். சோழர்கள், பாண்டியர்கள் என கதைக்களத்தை எடுத்துக்கொண்டு தனது மேஜிக்கை செல்வராகவன் அப்படத்தி நிகழ்த்தியிருப்பார்.
இப்படமும் வெளியானபோது போதிய வரவேற்பைப் பெறாமல் பிற்காலத்தில் கல்ட் க்ளாசிக்காக கொண்டாடப்பட்டது. மேலும் புதுப்பேட்டை போலவே இப்படத்தின் முடிவிலும் சோழன் பயணம் தொடரும் என இரண்டாம் பாகத்துக்கான லீட் வைக்கப்பட்டிருந்ததால் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற ஏக்கம் ரசிகர்களிடம் நீண்ட வருடங்களாக இருந்தது.
மேலும் படிக்க | தளபதி 66 டைட்டில் & பர்ஸ்ட் லுக்! வெளியானது அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!
அதனைப் போக்கும் வகையில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பையும் செல்வா வெளியிட்டார். அதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதேசமயம், புதுப்பேட்டை 2 குறித்த அப்டேட்டையும் அவர்கள் கேட்டுவந்தனர்.
இந்நிலையில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செல்வராகவனிடம் முதலில் ஆயிரத்தில் ஒருவன் 2 வருமா இல்லை புதுப்பேட்டை 2 வருமா என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த செல்வராகவன், முதலில் புதுப்பேட்டை 2தான் வரும் என்றார்.
மேலும் படிக்க | என்னது, ரஜினியின் ஜெயிலர் போஸ்டரே காப்பியா?! நெட்டிசன்ஸிடம் சிக்கிய நெல்சன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe