விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இன்று நேற்று நாளை'. இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செம்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார், தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


தமிழ் திரையுலகிற்கு வெற்றிகரமாக சயின்ஸ் பிக்ஸன் திரைப்படத்துடன் என்ட்ரி கொடுத்தவர் இயக்குநர் ரவிகுமார். இவரது அறிமுக படமான 'இன்று நேற்று நாளை' தமிழ் திரையுலகில் புதிய அத்தியாயத்தை எழுதியது. சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் இத்திரைப்படம் ஆரம்பமாகிறது என படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


ஆர்யா, விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ் நடிப்பில் ரவிகுமார் இயக்கிய 'இன்று நேற்று நாளை', 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா மற்றும் சி.வி.குமார் இணை தயாரிப்பில் வெளியானது. 


விஷ்ணு விஷாலின் சினிமா வாழ்க்கையில் இப்படம் அவருக்கு முக்கியமானதாக அமைந்தது. ஏ.வசந்த் ஒளிப்பதிவு அமைக்க, ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவிருப்பதாக சி.வி.குமார் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 


அதுமட்டுமின்றி ரவிகுமாரின் இணை இயக்குநரான கார்த்திக் 'இன்று நேற்று நாளை 2'வை இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு அமைக்க, ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் நடிப்பவர்கள் பற்றியும், மற்ற டெக்‌னிஷியன்கள் பற்றியும் விரைவில் வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.