மலையாள கவர்ச்சி நடிகை ஷகீலாவின் கதையை மையமாக கொண்ட பாலிவுட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், தெலுங்கு, மலையாளம் என உள்ளிட்ட மொழிகளில் நடித்தவர் நடிகை ஷகீலா. இவர் 90-களில் கவர்ச்சி பட நாயகியாக வலம் வந்தவர். இவருக்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்களின் செல்வாக்கு உள்ளது.


கேரளாவை சேர்ந்த இவரது வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். ஷகிலா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 


சினிமாவில் அவர் தனக்கு 16 வயது இருக்கும் போது அடியெடுத்து வைத்தவர். இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார். அவரது சினிமா வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவாக இருக்கிறது. 


ஷகீலாவின் இளம் வயது முதல் கதை எடுத்துச் செல்வதால், பல்வேறு காலகட்டங்களில் அவரை திரையில் பிரதிபலிப்பது பெரிய சவாலாக இருக்கும், என சத்தா கூறினார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கிளாமர் பக்கம் போகாமல், சாதாரண கேரள கசவு பட்டுடுத்தி அதில் சத்தா நிற்கிறார்.