விரைவில் தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பணிகள்....
`இந்தியன் 2` திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 12-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 12-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது!
கமல் - ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் 'இந்தியன் 2'. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டது., ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படத்தின் பட்ஜெட், கமலுக்கான மேக்கப் உள்ளிட்ட பல சிக்கல்கள் எழுந்ததை அடுத்து படத்தின் படப்பிடிப்பு கைவிடப்படது.
இந்நிலையில் தற்போது படத்தின் படப்படிப்பு பணிகள் மீண்டும் துவங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக லைகா ப்ரடக்ஷன்ஸ் நிறுவனம் சுபாஷ்கரன் சென்னை வந்த போது, இயக்குநர் ஷங்கர் அவரைச் சந்தித்து பேசினார். இதில் சுமுக முடிவு எட்டப்பட்டது எனவும், 200 கோடி பொருட்செலவு என்பது உறுதிச் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் 'இந்தியன் 2' பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார். ஆனால் படத்தின் தாமதத்தால் தற்போது அதிலிருந்து விலகிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில் தற்போது வரும் 12-ஆம் தேதி முதல் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என கூறப்படுகிறது. எனினும் படத்தின் வேலைபாடுகளை முழுமையாக முடிக்க காலதாமதம் ஏற்படும் எனும் பட்சத்தில் படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
'இந்தியன் 2' படத்துக்காக அனைத்து நடிகர்களிடமும் பெருவாரியான தேதிகளை வாங்கியுள்ளது படக்குழு. அதைப் போல் இந்தப் படத்தில் கவனம் செலுத்திக் கொண்டே, தனது 'தலைவன் இருக்கின்றான்' படத்திலும் நடித்து, இயக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன்.