நாளை முதல் பலூன் `ரொமாண்டிக் சிங்கள்`!
இப்படத்தின் ரொமாண்டிக் சிங்கள் நாளை மாலை 6 மணியளவில் வெளியாகிறது.
தமிழகத்தில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புடன் ஏற்பட்ட ஒரு சிறு விவாதத்தில் ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்று நடிகை ஓவியா கூறிய வார்த்தை மிகவும் பிரபலமானது.
ஓவியா கூறிய சொற்களை பயன்படுத்தி பாடல் ஒன்றை அமைக்கப்போவதாக பலூன் திரைப்படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இந்நிலையில் இன்று ‘நீங்க ஷட்
அப் பண்ணுங்க’ என்ற பாடல் வெளியாக உள்ளது படக்குழு அறிவித்திருந்தது. மேலும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாளை பலூன் திரைபடத்தின் இசையமைப்பாளர் வன்சங்கர் ராஜாவின் பிறந்தநாள் என்பதால் படத்தின் 'சிங்கள் ட்ராக்'-னை வெளியிடவுள்ளது என தெரிவித்துள்ளனர்.