’சிம்பு, வெங்கட்பிரபு அட்ரஸ் வேனுமா?’ பிரேம்ஜி டிவிட், எஸ்.ஜே.சூர்யா ரியாக்ஷன்
அண்ணாத்த வெற்றிக்காக, சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்கச் சங்கிலி வழங்கிய செய்தியை பகிர்ந்துள்ள பிரேம்ஜி, சிம்பு, எங்க அண்ணன் அட்ரஸ் வேணுமா? என டிவிட்டரில் கிண்டலாக கேட்டுள்ளார்.
கடந்த மாதம் இறுதியில் தியேட்டரில் ரிலீஸான மாநாடு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. திரைத்துறையில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த சிம்புவுக்கு இந்தப் படம் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இயக்குநரான வெங்கட்பிரபுவுக்கும், புதிய மைல்கல்லாக மாநாடு அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய வரவேற்பையும், வசூலிலும் ஹிட் அடித்த மாநாடு திரைப்படம், இந்த ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் வரிசையிலும் இடம்பிடித்துள்ளது
ALSO READ | 'வெந்து தணிந்தது காடு' படத்தின் டீசர் வெளியீடு!
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையான முயற்சிகளை எடுத்து இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வந்தார். ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும்கூட கடைசி நேரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது. ஆனால், படம் ரிலீஸாகி, பாசிடிவ் ரிசல்ட் வந்தவுடன், ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் திளைத்தது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் நேரில் சந்தித்து கேக் வெட்டி, வெற்றியையும் கொண்டாடினர்.
3 வாரங்களைக் கடந்து மாநாடு இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், பிரேம்ஜி கிண்டலாக ஒரு டிவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அண்ணாத்த படம் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிவா வீட்டுக்கு சென்ற ரஜினிகாந்த் அவருக்கு தங்கச்சங்கிலி ஒன்றை பரிசாக கொடுத்தார். அந்த செய்தியை பகிர்ந்துள்ள பிரேம்ஜி, சிம்புவை டேக் செய்து, தலைவா சிலம்பரசன், எங்க அண்ணன் வெங்கட்பிரபு அட்ரஸ் வேணுமா? சொல்லுங்க? எனக் கேட்டுள்ளார். இதற்கு எஸ்.ஜே. சூர்யா மற்றும் வெங்கட்பிரபு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கும் எமோஜியை கமெண்டாக பதிவிட்டுள்ளனர்.
ALSO READ | நயன்தாராவின் அடுத்த அவதாரம்: அழகு சாதன விற்பனையில் அடி எடுத்து வைத்தார் அழகி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR