கற்பழிக்கப் போவதாகவும், முகத்தில் ஆசிட் வீசுவதாகவும் மிரட்டல்- சின்மயி புகார்
என்னை கற்பழிக்கப் போவதாக டுவிட்டரில் பலர் மிரட்டுகிறார்கள் என்று புகார் தெரிவித்துள்ளார் பாடகி சின்மயி.
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாடகி சின்மயி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கணக்கு முடக்கப்பட்டது.
ஆனால், சுசி லீக்ஸ் என்கிற ஹேஸ்டேக்கில் இருந்து பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சின்மயி தன் மீது ஆசிட் அடிக்க போவதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்போவதாகவும், இனி பாடவிடாமல் செய்யப்போவதாக டுவிட்டரில் சிலர் தன்னை மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரி மிரட்டல் விடும் நபர்களின் டுவிட்டர் கணக்குகள் அனைத்தையும் முடக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து, Change.org ஒரு ஆன்லைன் பெட்டிஷனை இணையவாசிகளிடம் வைத்துள்ளார். இந்த ஆன்லைன் பெட்டிஷன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.