சிவகார்த்திகேயனின் நடிப்பில் தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று அயலான். அறிவியல் புனைகதை கொண்ட படமான 'அயலான்' 2024 பொங்கல் அன்று வெளியாக உள்ளது. ரவிக்குமார் இயக்கிய அயலான் படத்தில் சிவகார்த்திகேயன், அனிமேஷன் ஏலியன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்தியத் திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையிலான VFX காட்சிகளைக் கொண்ட படம் அயலான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க..’ மனதை சொக்க வைக்கும் மாளவிகா!


பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் லால் சலாம், தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் மற்றும் விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்துமஸ் படங்களும் வெளியாக உள்ளது.  அயலான் படத்தின் தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன்பு திட்டமிட்டபடி பொங்கல் அன்று தமிழ் மற்றும் தெலுங்கில் படம் வெளியாகும் என்று உறுதிப்படுத்தினர். சிவகார்த்திகேயனின் கேரியரில் உலகளவில் அதிக நாடுகளில், அதிக திரையரங்குகளில் அயலான் படம் வெளியாக உள்ளது. அயலான் படத்தின் மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். கேஜேஆர் ஸ்டுடியோவின் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, ஏஆர் ரஹ்மான் இசையில் இரண்டாவது சிங்கிள் விரைவில் வரும் என்றும், டிசம்பர் 26 ஆம் தேதி பிரமாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானும் நேரடி நிகழ்ச்சியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இப்படம் 2016 ஆம் ஆண்டு முதல் படப்பிடிப்பில் உள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. இப்படத்தின் வா சாகோ என்ற முதல் பாடல் நீண்ட நாட்களுக்கு முன்பு வெளியானது.  அயலான் படத்தில் நான்கு பாடல்கள் இருக்கும் என்றும், அவை பிரமாண்ட ஆடியோ விழாவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.  இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பே துவங்கினாலும், VFX பணிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தடை காரணமாக அயலான் பல தாமதங்களைக் கண்டது. இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டனர், இருப்பினும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக தயாரிப்பாளர்களால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொங்கல் தினத்தில் வெளியாகும் எல்லா படங்களும் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் என்பதால் பெரும் மோதல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | “கட் அடிக்கலாம் பிட் அடிக்கலாம்.. இதை மட்டும் பன்னாதீங்க” மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ