சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக் வாய்ப்பை நிராகரித்த சிவகார்த்திகேயன்!
ரீமேக் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்
சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, பின்னர் தமிழ்த் திரைப்பட நடிகராக உயர்ந்தவர். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர், தன் திறமையின் மூலம் திரைப்பட வாய்ப்பு கிட்டவே இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், 'மெரினா' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கினார்.
பின்னர் தனுஷின் '3' படத்திலும் 'மனம் கொத்தி பறவை' படத்திலும் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார். 2013-ம் ஆண்டு வெளியாகிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மாபெரும் வெற்றி பெற்ற படமாக அமைந்தது. பின்னர் காக்கி சட்டை, மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியாகி வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் படம் 'டாக்டர்'. இப்படத்திற்கு அனிருத்தின் இசை மேலும் கூடுதல் பலம் சேர்ப்பதாக இருந்தது. ‘மனித கடத்தலை’ மையமாக வைத்து சீரியசாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் முழுக்க காமெடிகளால் களைகட்டிய இது பிளாக் பஸ்டர் படமாக மாறியுள்ளது. முதல் நாளிலேயே பெரிய அளவில் வெற்றியை குவித்திருக்கும் இந்த ‘டாக்டர்’ படம் ஒரு டார்க் காமெடி வகை திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. பிரியங்கா மோகனுடன் மீண்டு 'டான்' என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்திய நேர்காணலில், தன்னை தேடி இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் அதனை வேண்டாம் என்று மறுத்து விட்டடேன் எனவும் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'பிரேமம்' மற்றும் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி ஹிட்டான 'அலா வைகுந்தபுரம்லோ' படங்களின் ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது,தனக்கு ரீமேக் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்தார். அலா வைகுந்தபுரம்லோ கடந்த வருடம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தொலைக்காட்சியில் வெளியானது.
ALSO READ தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சிஸ்கே வீரரின் சகோதரி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR