நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலில்ம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படப்பிடிப்பு ஆரம்பம்:


சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கும் படத்தினை, உலக நாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இனிதே தொடங்கியதாக படக்குழு தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 



சமீபத்தில் நடைப்பெற்ற இந்த படத்தின் பூஜை விழாவில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் கமல் ஹாசனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளது. 


மேலும் படிக்க | Jawan Release: மீண்டும் தள்ளிப்போன ஜவான் படத்தின் ரிலீஸ்..ஜெயிலருக்கு போட்டியாக வருகிறதா?


பூஜை விடியோ:


எஸ்.கே 21 படத்தின் பூஜையில், அப்படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் நடிகைகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை சாய் பல்லவி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி பூஜையை தொடங்கி வைத்தனர். இந்த பூஜை வீடியோ, ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவினை, ரசிகர்கள் பலர் ட்விட்டர் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ வைரலவாதற்கு முக்கிய காரணம், இதற்காக பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள பாடல்தான். 



டைட்டில் இதுதானா?


சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ஆனால், இன்று வெளியாகியுள்ள பூஜை வீடியோவில், “அன்பே சிவம்..” எனும் பாடல் பின்னணியில் ஒலிக்கப்படுகிறது. இதனால், கமல் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான அன்பே சிவம் படத்தின் டைட்டிலே இதற்கு வைக்கப்பட்டிருக்குமோ என சிலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 


புதிய கூட்டணி:


தமிழ் திரையுலகில் சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி இன்று பல லட்சம் ரசிகர்களின் மனங்களில் பிடித்த நடிகராக நின்று விட்டார், சிவகார்த்திகேயன். சில முன்னணி நடிகர்களுக்கு இணையாகவும் புகழ்ந்து பேசப்படும் இவர், சமீப காலங்களில் வெளியான தனது படங்களின் மூலம் தோல்வியை சந்தித்து வந்தார். அதிலும் கடைசியாக வெளியான ப்ரின்ஸ் படம் வசூல்-விமர்சனம் இரண்டிலும் சறுக்கியது. இதையடுத்து, தனது 21ஆவது படத்தில் புதிய கூட்டணியுடன் கைக்கோர்க்கிறார் சிவா. சாய் பல்லவி நடித்த படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் கூட நடித்திராத இவர், இப்போது அவருக்கு ஜோடியாகவே இந்த படத்தில் நடிக்கிறார். அது மட்டுமன்றி, நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடனும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக கைக்கோர்க்கிறார். இந்த புதிய கூட்டணி கண்டிப்பாக வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க | ‘கூலான லோகேஷ்..தளபதி அடிபொலி’ லியோ குறித்து எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை கூறிய மாத்ய


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ