ரிலீஸூக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் 3வது படம்
சிவகார்த்திகேயனின் 2 படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கும் நிலையில், 3வது படத்தையும் இந்த ஆண்டே திரைக்கு கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறாராம்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராக இருக்கும் திரைப்படம் ’டான்’. அடுத்த மாதம் ரிலீஸாக உள்ள நிலையில், அவரது நடிப்பில் ரிலீஸூக்கு தயராக இருக்கும் மற்றொரு திரைப்படம் ‘அயலான்’. இந்த திரைப்படமும் இந்த ஆண்டு பிற்பகுதியில் நிச்சயம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் எஸ்கே 20 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸூக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க | ’நான் மறுத்தேன், அல்லு அர்ஜூன் தான் காரணம்’ - சமந்தா
எஸ்கே 20 திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் எஸ்கே 20 திரைப்படத்தின் சூட்டிங் படு சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சென்னை, புதுச்சேரி, காரைக்குடி மற்றும் லண்டன் என பல்வேறு இடங்களில் படமாக்கப்படும் இந்தப் படத்தின் சூட்டிங், ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை படத்தின் சூட்டிங் முடிவடைந்தால், ஆண்டின் இறுதியில் அல்லது தீபாவளி விருந்தாக படத்தை ரிலீஸூக்கு கொண்டு வரலாம் என்ற பிளானில் படக்குழுவினர் உள்ளனர்.
ஒரே ஆண்டில் 3 படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். எஸ்கே 20 சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தனது சொந்த ஊரான திருவீழிமலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் சொந்த ஊரின் பள்ளிக்கூடம் மற்றும் அப்பகுதி ஊர்மக்கள் உள்ளிட்டோரை சந்தித்து செல்பியும் எடுத்துக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திருநள்ளாறு சென்று சனி பகவானையும் வழிபட்டுள்ளார். சொந்த ஊருக்கு சிவகார்த்திகேயன் சென்றது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ’அந்த வாழ்க்கையை விரும்பவில்லை’ - சன்னிலியோனின் எமோஷ்னல் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR