சமீபத்தில் வெளியான 'மாநாடு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் கதாநாயகனாக நடித்த சிம்புவின் கதாபாத்திரத்தை விட வில்லனாக கலக்கிய எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் கொண்டாடப்பட்டது.    இதற்கு முன்னர் மகேஷ்பாபு நடித்த 'ஸ்பைடர்' மற்றும் விஜய் நடித்த 'மெர்சல்' போன்ற படங்களிலும் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.  இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் ரசிகர்களை எஸ்.ஜே.சூர்யா மிரட்ட வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஏப்ரல் மாதத்திற்கு முன் வெளியாகும் எஸ்.ஜே.சூர்யாவின் 5 படங்கள்!


இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.  மேலும் அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டார்.  இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன்-விஷால் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



தற்போது எஸ்.ஜே.சூர்யா ராதாமோகன் இயக்கத்தில், மான்ஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் பிரியா பவானி சங்கருடன் இணைந்து 'பொம்மை' என்கிற படத்தில் நடித்துள்ளார்.  இப்படம் அடுத்த ஆண்டு ரிலீசுக்காக காத்திருக்கிறது.  மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'DON' படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார், இப்படமும் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது.  மேலும் இவர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' என்கிற படத்திலும் நடித்துள்ளார்.  இப்படம் 2022 மார்ச் மாதம் வெளிவர உள்ளது.  அதுமட்டுமல்லாது இவர் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.


ALSO READ | கமலின் விக்ரம் ரிலீஸ் தேதி! அதிகார்வபூர்வ அறிவிப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR