ரிலீஸானது சூர்யாவின் சொடக்கு பாடல் !!
சூர்யா, கார்த்திக், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, செந்தில் உட்பட பலர் நடிக்கும் படம், ’தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தை ’நானும் ரவுடிதான்’ பட ஹிட்டுக்குப் பிறகு விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். ஆக்ஷன் காமெடி படமான இதை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ‘நானா தானா’ சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது, படத்தில் இடம்பெறும் ‘சொடக்கு’ எனும் முழு பாடல் இன்று வெளியாகியுள்ளது. முன்னதாக இப்பாடலின் டீஸர் வெளியாகி பெரும் ஆர்வம் தூண்டி இருந்த நிலையில் தற்போது ‘சொடக்கு’ எனும் முழு பாடல் வெளியானது.