‘சோலோ’ அக்டோபர் 5-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
துல்கர் சல்மான் நடிப்பில் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படம் ‘சோலோ’. இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். இந்த படத்த்தில் துல்கர் சல்மானுடன் நேகா ஷர்மா, பார்த்திபன், சதீஷ், நாசர், ஆர்த்தி வெங்கடேஷ், சாய் தன்ஷிகா, ஸ்ருதி ஹரிஹரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் 4 வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘சோலோ’ படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.