வசூலில் சாதனை படைக்கும் கருடன்... இரண்டு நாள் வசூல் நிலவரம் எவ்வளவு?
Garudan Box Office Collection Day 2: சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கருடன் திரைப்படம் கடந்த 31 ஆம் தேதி ரிலீஸானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டி வருகிறது.
Garudan Box Office Collection Day 2: துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் கருடன் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தற்போது ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் மிரட்டி வருகிறது. இதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.
கருடன் திரைப்படம்:
இயக்குனர் துரை செந்தில் குமார் உருவாகியுள்ள கருடன் படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்குக் கதையை இயக்குனர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். மேலும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது கடந்த மே 31 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த மக்கள் சூரியின் நடிப்பு மிரள செய்திருப்பதாக கூறுயிருந்தனர். அதுமட்டுமின்றி இத்தனை வருட உழைப்புக்கு சூரிக்கு இப்போதுதான் தீனி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. கண்டிப்பாக இனி அவரது வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும் என்று வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
மேலும் படிக்க | லீக்கானது இந்தியன் 2 ரிலீஸ் தேதி வெளியீடு.. உற்சாகத்தில் கமல் ரசிகர்கள்
வசூல் வேட்டையில் கருடன் திரைப்படம்:
கருடன் படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வரும் நிலையில், விமர்சன ரீதியாகவும் கலெக்ஷன் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது. முதல் நாள் மூன்று கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது நிலையில் இரண்டாவது நாளான நேற்று படம் செய்த வசூல் குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி நேற்று மட்டும் 4.65 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாகவும், இன்றும் விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக இன்றைய வசூலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் சூரியின் வாங்கிய சம்பளம்:
இதனிடையே சக்கைப்போடு போட்டு வரும் கருடன் படத்திற்காக சூரி வாங்கியுள்ள சம்பளம் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அசத்தலாக நடித்து வரும் சூரி, இந்த படத்திற்காக ரூ. 8 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்! இத்தனை பேரா..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ