அண்ணா சீரியல்: மரண பயத்தை காட்டிய ஷண்முகம்... ரத்னாவை தூக்க வந்த சௌந்தரபாண்டி
Zee Tamil Anna Serial August 2nd 2023 Update: ரத்னாவை தூக்க வந்த சௌந்தரபாண்டி.. மரண பயத்தை காட்டிய ஷண்முகம் - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி ரத்னாவை தூக்க கிளம்ப ஷண்முகம் கோபத்துடன் காத்திருக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது ஷண்முகம் வீட்டின் அருகே இரண்டு பேர் கூட்டு சேர்ந்து முதலில் காலில் கயிறு கட்டி இழுக்க வேண்டும், பிறகு கோணிப்பையை போட்டு முகத்தை மூட வேண்டும் என்று பிளான் போடுகின்றனர், அடுத்ததாக வரும் இருவருக்கும் இந்த திட்டத்தை சொல்லி கயிறை தூக்கி போட்டு அவர்கள் சுவர் ஏறி குதிக்க சண்முகமும் தங்கைகளும் சேர்ந்து அவர்கள் நான்கு போரையும் அடி வெளுத்து எடுக்கின்றனர்.
சௌந்தரபாண்டி அனுப்பின ஆள் தானே நீங்க என்று ஆவேசப்பட அவர்கள் நாங்க மாடு திருட வந்தவங்க என்று சொல்கின்றனர், அடுத்ததாக சௌந்தரபாண்டி ரவுடிகளுடன் வந்து இறங்கி வீட்ல ஒரு வயசான டிக்கெட், நான்கு பொம்பளைங்க, ஒரே ஒருத்தன் மட்டும் தான் இளம் ஆளு அவனையும் நான்கு பேரும் சேர்ந்து சமாளிச்சு ரத்னாவை அலாக்கா தூக்கிட்டு வாங்க. அவ என் வீட்டு மருமகள், அங்க இங்க கை படாமல் துணி போட்டு தூக்கிட்டு வாங்க என்று சொல்லி கொண்டிருக்க அடி வாங்கிய நான்கு பேரும் இவர்கள் மீது வந்து மோதி விழுகின்றனர்.
சௌந்தரபாண்டியுடன் வந்த ரவுடிகளுக்கு இவர்கள் தான் குரு என தெரிய எல்லாருக்கும் அங்கிருந்து பயந்து எஸ்கேஎப் ஆகி விடுகின்றனர், இதனையடுத்து சௌந்தரபாண்டியும் சனியனும் தனியாளாக நிற்க சனியன் இப்போ எதுவும் பண்ண வேண்டாம் என்று சௌந்தரபாண்டியை சமாளித்து அழைத்து சென்று விட வீட்டில் முத்துப்பாண்டி கையில் தாலியுடன் ஆர்வத்துடன் காத்திருக்க கார் சத்தம் கேட்டு எங்க என் பொண்டாட்டி என்று கேட்கிறான்.
என் பொண்டாட்டிய டிக்கில கட்டி கொண்டு வந்திருக்கீங்களா என்று கோபப்பட்டு டிக்கியை திறந்து பார்க்க ஒன்றுமில்லை, பிறகு சனியன் இணைக்கு ரத்னாவை தூக்க முடியல என்று சொல்ல முத்துப்பாண்டி அப்பாவிடம் கோபப்படுகிறான். அவர் ஊர் அறிய நீ ரத்னா கழுத்துல தாலி கட்டுவ என புது திட்டத்தை சொல்ல பாக்கியமும் பரணியும் இதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். பாக்கியம் நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது என்று சொல்ல சௌந்தரபாண்டி நடத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறான்.
அடுத்ததாக இவர்கள் ஷண்முகம் கடைக்கு வர பாக்கியம் முதல் முறையாக கடைக்கு வந்ததால் ஷண்முகம் வரவேற்று கூல்ட்ரிங்ஸ் கொடுத்து உட்கார வைக்க சௌந்தரபாண்டியின் திட்டத்தை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள். தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.
மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ