தனியாக விமானம் வைத்திருக்கும் தென்னிந்திய நடிகர்கள்! லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நடிகை..

சில தென்னிந்திய நடிகர்கள், தனியாக விமானம் வைத்திருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?
நடிகர்கள் பலர், சினிமாவில் நடிப்பது மட்டுமன்றி அதில் வரும் வருமானம் மூலம் பல சிறு,குறு தொழில்களையும் செய்து வருகின்றனர். அப்படி செய்யும் தொழில்கள், அவர்களுக்கு ஏற்றத்தை கொடுக்கின்றன. இதனால் அவர்களுக்கு பல வழிகளில் வருமானங்கள் வருகின்றன. அதை அவர்கள் வீடு, நிலங்கள், சொகுசு கார்கள், என சொத்துக்களை சேர்த்து வைக்கின்றனர். அதில் சிலர் ப்ரைவேட்டாக தங்களுக்காக விமானத்தை வாங்கி வைத்துள்ளனர். அப்படி விமானம் வைத்துள்ளவர்கள் யார் யார் தெரியுமா?
ராம் சரண்:
தமிழில் ‘மாவிரன்’என்ற பெயரில் வெளியான படம் மூலமாக கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர், ராம் சரண். தற்போது இஜ்ந்தியாவில் அதிகம் சம்பளம் வங்கும் பணக்கார நடிகர்களுள் ஒருவராகவும் இவர் இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வரை வென்ற ஆர்ஆர்ஆர் படத்திலும் இவர் நாயகனாக நடித்திருக்கிறார். மெகா குடும்பம்பத்தில் முக்கிய உறுப்பினராக இருக்கும் இவர் வீடு, சொகுசு கார் என பல சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார். இவர், சொந்தமான விமானம் ஒன்றை வைத்துள்ளார்.
ஜூனியர் என்.டி.ஆர்:
ராம் சரணின் உறவினர்களில் சிலர் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். அப்பைட் இருக்கும் நபர்களில் ஒருவர், ஜூனியர் என்.டி.ஆர். இவரும் ராம் சரணுடன் சேர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தில் சேர்ந்து நடித்திருந்தார். இவருக்கும் பல கோடிகளில் சொத்து மதிப்புகள் உள்ளன. இவர், 8 கோடி மதிப்பிலான விமானம் ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகள்! யார் யார் தெரியுமா?
பிரபாஸ்:
பிரபாஸை பலர் பெரிய பட்ஜெட் ஹீரோ என்றும் அழைக்கின்றனர். காரணம், அவர் பாகுபலி படத்திற்கு பிறகு 200 கோடிக்கும் அதிகமாக பட்ஜெட் இருக்கும் படங்களிளேயே நடித்து வருகிறார். வெளிநாடுகளில் வீடு, இந்தியாவின் பிரபல நகரங்களில் வீடு, சொகுசு கார்கள் என இவரும் பல வீடுகளை வாங்கி குவித்துள்ளார். இவருக்கும் பல கோடிகள் மதிப்புள்ள விமானத்தை வைத்துள்ளார். அதில், அவ்வப்போது இவர் பயணம் செல்வதும் உண்டு.
அல்லு அர்ஜுன்:
புஷ்பா படத்திற்காக சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளவர், அல்லு அர்ஜுன். இவருக்கும் இந்திய அளவில் பெரிய ரசிகர்கள் கூட்டம் உண்டு. தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார். இவரும் அல்லு-கொண்டிலா குடும்பத்தில் முக்கிய உறுப்பினர் ஆவார். இவர், 6 இருக்கைகளை கொண்ட விமானத்தை சொந்தமாக வைத்துள்ளார்.
நயன்தாரா:
ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. ஜவான் படம் மூலம் பாலிவுட்டிற்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவருக்கும் கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு உள்ளது. இவர், தன் கணவருடன் இணைந்து ஒரு தனி விமானத்தை வாங்கியுள்ளார்.
மேலும் படிக்க | பிரபல நடிகையை திருமணம் செய்த ரெடின் கிங்ஸ்லி! பொண்ணு யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ