Suriya சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் ஓடிடியில் வெளியான படம் சூரரை போற்று.  மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படம் திரையரங்கில் வெளிவராமல் ஓடிடியில் வெளியானதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது, இருப்பினும் இப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.  சமீபத்தில் மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவுக்கு கிடைத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்நிலையில் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற கையிலே ஆகாசம் பாடலை பார்த்து எனது கண்களில் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.  இப்பாடல் குறித்து தனது பிளாகில்(Blog) எழுதி அமிதாப் பச்சன், " எதிர்பார்த்ததை விட சில சமயம் சிறப்பாக நடக்கிறது, அப்படி ஒரு இரவாக நேற்றிரவு அமைந்தது. அதுவும் அதிக  உணர்ச்சிகளுடன் அமைந்தது, எனது கண்ணீரை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.  என்னை மீறி கண்ணீர் துளிகள் வெளிவந்தன, எனது இந்த நொடிகளை யாரிடமும் பகிர முடியாது; அதனால் எழுதுகிறேன்.  ஒரு பாடல், சூர்யா படத்தில் இடம்பெற்ற ஒரு தமிழ் பாடல், தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யாவின் இந்த பாடலை காணமுடிந்தது, இந்த பாடலை பார்த்தபின் எனது கண்களில் கண்ணிரை கட்டுகண்ணீரைப்படுத்த முடியலை.  அப்பா மகனுக்கு இடையே உள்ள பாசத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த பாடல்.  இந்த பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது, மனதிற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, நிறைய நினைவுகளை எனக்கு கொண்டு வந்து தந்தது.  இதற்குமேல் என்னால் எழுத முடியவில்லை கண்ணீர் மட்டுமே அதிகமாக வருகிறது" என்று இந்த பாடலின் மூலம் தான் பெற்ற அனுபவத்தை எழுதி இருந்தார்.  மேலும் இப்பாடலை பகிர்ந்து இதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து இருந்தார் அமிதாப்பச்சன். அமிதாப்பச்சன் இந்த பதிவிற்க்கு  சூரரை போற்று படத்தின் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.


 



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR