நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Sri Divya Marriage: பிரபல நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் சில ஆண்டுகளுக்கு முன்னர முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதிவ்யா. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ரீதிவ்யா:
தெலங்கானாவில் பிறந்து வளர்ந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர், ஸ்ரீதிவ்யா. இவர், மூன்று வயதிலேயே நடிக்க வந்தவர். குழந்தை நட்சத்திரமாக சில தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார். 2010ஆம் ஆண்டு வெளியான‘மனசாரா’எனும் தெலுங்கு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு சில தெலுங்கு படங்களில் நடித்த இவர், தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
திருமணம் குறித்து பேசிய ஸ்ரீதிவ்யா:
நடிகை ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் திருமணம் குறித்த கேள்விகளும் அது காதல் திருமணமாக இருக்குமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமாக இருக்குமா என்பது போன்ற கேள்விகளை கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஸ்ரீதிவ்யா, கண்டிப்பாக தன்னுடையது காதல் திருமணமாகதான் இருக்கும் என்றும் நிச்சயமாக எனது காதலரைதான் கரம் பிடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால், திருமணம் குறித்த அறிவிப்பினை இவர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7 வைல்ட் கார்ட்: போட்டிக்குள் பாதியில் நுழையும் 5 பேர் இவர்கள்தான்!
தமிழ் ரசிகர்களின் மனங்களை கொய்த நாயகி..!
தமிழ் சினிமாவை பொறுத்த வரை, ஒரு சில கதாநாயகிகள் சில வருடங்கள் மட்டும்தான் மார்கெட்டில் இருப்பர், இருக்கும் வரை அவர்களது மார்கெட் டாப்பில்தான் இருக்கும். அப்படிப்பட்ட கதாநாயகிகளுள் ஒருவர், ஸ்ரீதிவ்யா. 2013ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலம் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா. இந்த படம் நடிக்கும் போது அவருக்கு தமிழே தெரியாது. தமிழ் டைலாக்குகளையும் தெலுங்கில் எழுதி வைத்துதான் பேசுவாராம். ஆனாலும் ‘லதா பாண்டி’ என்ற கதாப்பாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
தொடர் வெற்றி..
ஸ்ரீதிவ்யா-சிவகார்த்திகேயனின் ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. அதனால், மீண்டும் காக்கி சட்டை படத்தில் இருவரும் கைக்காேர்த்தனர். ஆனால், இந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. சிவகார்த்திகேயனுக்காக ரெமோ படத்தில் காமியோ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. 2013-2015 ஆண்டுகளில் இவர் நடித்திருந்த முக்கால் வாசி படங்கள் நன்றாகவே வரவேற்பினை பெற்றது. ஆனால், இதையடுத்து 2016ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் நடிக்க ஆரம்பித்த படங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தமிழில் கடைசியாக 2017ஆம் ஆண்டு ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நன்றகாவே வரவேற்பினை பெற்றது. ஆனாலும் அதன் பிறகு அவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.
பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணம் என்ன?
கோலிவுட் ரசிகர்களை பொறுத்தவரை, ஒரு நாயகியை சில படங்களில் ஹோம்லி லுக்கில் பார்த்து விட்டால் அதன் பிறகும் அவர்களை அதே லுக்கில் பார்க்க வேண்டும் என்று நினைப்பர். ஸ்ரீதிவ்யா, படங்களில் நடித்து கொண்டிருக்கும் போது அவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில வெளியாகின. அது மட்டுமன்றி, ஒரு பிரபல நடிகரின் வீட்டு விழாவில் இவர் குடித்து விட்டு ஆடியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் தீயாக பரவியதால் ரசிகர்கள் பலர் இவர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர். இவரை நாயகியாக நடிக்க வைத்தால் படம் ஓடாதோ என்று எண்ணிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் இவரை வேறு எந்த படங்களிலும் கமிட் செய்யவில்லை. இதுதான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனதற்கு காரணமாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் ‘ரெய்டு’ எனும் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் படிக்க | பிக்பாஸ் 7: இந்த வாரம் 2 எவிக்ஷன்! வெளியேறிய போட்டியாளர்கள் யார் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ