ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் 22-வது திருமண நாளன்று ஸ்ரீதேவியின் மகிழ்சிகரமான கடைசி நிமிட வீடியோவை பகிர்ந்துள்ளார்!   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி. இவர் துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் பிப்ரவரி 24-ம் தேதி 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது மரணம் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குடும்பத்தினரும் துயரத்தில் மூழ்கினர். 


இந்நிலையில், நேற்று ஶ்ரீதேவி மற்றும் போனி கபூரின் திருமண நாள். இந்நாளில், ஶ்ரீதேவியின் நினைவலைகளில் இருந்து தான் மீளாததை ட்விட்டர் பதிவின் மூலம் போனி கபூரின் தெரியப்படுத்தியுள்ளார். அவரின் பதிவில், `இன்று எங்களது 22-வது திருமண நாள்..ஜான்...என் மனைவியின் ஆத்மா, காதல், கருணை, அரவணைப்பு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் பரிபூரணம் என்னுள் எப்போதும் வாழ்கிறது' என்று ஸ்ரீதேவியை பிரிந்து, அவரது நினைவில் வாழ்ந்து வருவதை மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். 


மேலும், துபாயில் ஸ்ரீதேவி கலந்து கொண்ட திருமணத்தில் எடுக்கப்பட்ட அவரின் இறுதியான மகிழ்ச்சி தருணங்களை தொகுத்து வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில், `ஸ்ரீதேவி அழகாகப் புன்னகை செய்து, நடனமாடும் காட்சி' பார்ப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஸ்ரீதேவியை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.