ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வசூலில் பல்வேறு புதிய சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுவரை வெளியான விஜய் படங்களில் அதிக வசூல் செய்த முதல் 10 படங்கள் பற்றிய ஐ.எம்.டி.பி (IMDb)யின் தகவல்களைப் பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய்யின் டாப் 10 வசூல் படங்களின் பட்டியலில் 10ஆவது இடம் பிடித்துள்ள படம் நேசன் இயக்கத்தில் வெளியான ஜில்லா. மோகன் லாலுடன் விஜய் முதன்முறையாக இணைந்து நடித்த இந்தப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. 58 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம் 78 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். 9ஆவது இடத்தில் உள்ள படம் நண்பன். பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இது, விஜய்- ஸ்ரீகாந்த்- ஜீவா என ஒரு மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளிவந்தது. 2012 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் 55 கோடியில் உருவாக்கப்பட்டு 86 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்டோர் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வந்த புலி திரைப்படம் இந்தப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. விஜய் நடித்த முதல் ஃபேண்டஸி அட்வெஞ்சர் ஆக்சன் படமான இது 92 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 105 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். 7ஆவது இடத்தைப் பிடித்துள்ள படம் பைரவா. இயக்குநர் பரதனுடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்த படம் இது.  கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இப்படமானது 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலக அளவில் 115 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாம்.


                                                  


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்: தீயாகப் பரவும் வைரல் போஸ்ட்!


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இரண்டாவது முறையாக கைகோத்து விஜய் நடித்த கத்தி இந்தப் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது. 70 கோடி ரூபாயில் உருவான இப்படம்  உலக அளவில் 134 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளதாம். 5ஆவது இடத்தில் துப்பாக்கி படம் உள்ளது. விஜய்- ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் உருவான முதல் படமான இதில் கஜால் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த முதல் விஜய் படமான இது வியாபார ரீதியாக நடிகர் விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்தது. 60 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட துப்பாக்கி உலக அளவில் 137 கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாம். குறிப்பாக வெளிநாட்டில் மட்டும் 35 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாம்.


அட்லியுடன் விஜய் கைகோத்த முதல் படமான தெறி இதில் 4ஆவது இடத்தில் உள்ளது. 72 கோடியில் எடுக்கப்பட்டு 168 கோடி ரூபாய் இது வசூல் செய்திருக்கிறதாம்.
ஏ.ஆர்.முருகதாஸுடன் 3ஆவது முறை, கீர்த்தி சுரேஷுடன் 2ஆவது முறை என அமைந்த விஜய்யின் சர்க்கார், இந்தப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. உலக அளவில் 258 கோடி ரூபாய் வசூல் செய்த இப்படம், 130 கோடியில் எடுக்கப்பட்டதாம்.


                                                                


வசூல் பட்டியலில் 2ஆவது இடம் மெர்சலுக்குக் கிடைத்துள்ளது. விஜய்- அட்லி காம்போவின் 2ஆவது படமான இது உலக அளவில் 267 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய இந்தப் படம் 120 கோடி பட்ஜெட்டில்  உருவானதாம். 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் விஜய் படம் எனும் சிறப்பைப் பெற்ற இப்படம் விஜய்யை வசூல் சக்கரவர்த்தியாக மாற்றிய படங்களுள் முக்கியமான ஒன்றாக அமைந்தது.


இந்தப் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது விஜய்யின் பிகில். அட்லியுடன் 3ஆவது முறையாக விஜய் இணைந்த இந்தப் படத்தில் தந்தை- மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் விஜய். ஒட்டுமொத்த  விஜய்யின் கரியரில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ள இது 180 கோடியில் எடுக்கப்பட்டு, உலக அளவில் 321 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாம். வெளிநாடுகளில் மட்டும் 96 கோடி ரூபாய் வசூல் செய்த இது, ஒட்டுமொத்தமாக 300 கோடி வசூல் செய்த முதல் விஜய் படம் எனும் சிறப்பைப் பெற்றது.


                                         


நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட், எவ்வளவு வசூல் செய்யப்போகிறது எந்த மாதிரியான சாதனைகளைப் படைக்கப் போகிறது என பொறுந்திருந்து பார்க்கலாம்.


மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR